அமெரிக்காவில் வானில் திடீரென மாயமான விமானம்! கேள்விகுறியாகியுள்ள 10 பயணிகள் நிலை?
பெரிங் ஏர் நிறுவனத்தின் வணிக விமானம் அலாஸ்காவின் நோம் அருகே காணாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன விமானம்
பெரிங் ஏர் நிறுவனத்தின் வணிக விமானம் 10 பேருடன் அலாஸ்காவின் நோம் அருகே காணாமல் போயுள்ள நிலையில், தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
செஸ்னா காரவான்(Cessna Caravan) ரக விமானம் யுனாலக்லீட்டில்(Unalakleet) இருந்து நோம்(Nome) நகருக்குச் செல்லும் வழியில், பிப்ரவரி 6, 2025 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணி அளவில் ரேடாரில் இருந்து மறைந்து போனதாக அலாஸ்கா(Alaska) மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலை
தற்போது மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலம் தேடும் பணி தடைபட்டுள்ளது.
நோம் மற்றும் வைட் மவுண்டன் நகரைச் சேர்ந்த தரைக்குழுவினர் விமானத்தின் கடைசி அறியப்பட்ட ஒருங்கிணைப்புகளை மையமாகக் கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்க கடலோர காவல்படை C-130 விமானத்தை வான்வழி ஆய்வுக்காக அனுப்ப தயாராகி வருவதாகவும், அமெரிக்க விமானப்படை எல்மென்டார்ஃப் விமானப்படை தளத்திலிருந்து வான்வழி ஆதரவை அனுப்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் காணாமல் போனதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை, இருப்பினும் மோசமான வானிலையே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |