அமெரிக்க நகரம் ஒன்றில் கடைசி சூரிய உதயம்... இனி 84 நாட்களுக்கு இடைவிடாத பகல் ஒளி

Weather
By Arbin May 12, 2026 05:56 AM GMT
Report

அமெரிக்காவின் வடகோடியில் உள்ள நகரம் ஒன்று, இந்தப் பருவத்தின் தனது கடைசி சூரிய உதயத்தைக் கண்டதோடு, தொடர்ந்து 84 நாட்களுக்கு இடைவிடாத பகல் ஒளியை அனுபவிக்க இருக்கிறது.

ஆகஸ்ட் 2 வரை

அலாஸ்காவின் Utqiaġvik நகரமானது மாகாணத்தின் மிக வடமுனையில் ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 4,500 மக்கள்தொகை கொண்ட இந்த நகரமானது ஒவ்வொரு ஆண்டும், வசந்தம் மற்றும் கோடை மாதங்களில் நீண்ட காலத்திற்கு இடைவிடாத பகல் ஒளியை அனுபவிக்கிறது.

அமெரிக்க நகரம் ஒன்றில் கடைசி சூரிய உதயம்... இனி 84 நாட்களுக்கு இடைவிடாத பகல் ஒளி | Alaskan Town Final Sunrise

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.57 மணிக்கு, சுமார் ஒரு மணி நேரம் அடிவானத்திற்குச் சற்று கீழே மறைந்திருந்த சூரியன், Utqiaġvik மீது உதித்தது. இதன் பின்னர் ஆகஸ்ட் 2 வரை இந்த நகரம் மற்றொரு சூரிய அஸ்தமனத்தைச் சந்திக்காது.

தேசிய வானிலை சேவையின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் ஏற்படும் தொடர் பகல் பொழுதானது நள்ளிரவுச் சூரியன் அல்லது துருவப் பகல் என்று அழைக்கப்படுகிறது.

ஹார்முஸில் இராணுவ நகர்வு... பிரான்ஸ், பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்

ஹார்முஸில் இராணுவ நகர்வு... பிரான்ஸ், பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்

ஆர்க்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ள அனைத்து நகரங்கள், பேரூர்கள் மற்றும் சமூகங்களும் இந்த நிகழ்வை அனுபவிக்கின்றன. அமெரிக்காவில் நள்ளிரவு சூரியனை அனுபவிக்கும் ஒரே மாகாணம் அலாஸ்கா மட்டுமே, ஆனால் கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து, சுவீடன் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளுக்கும் இந்த நிகழ்வை அனுபவிக்கின்றன.

அமெரிக்க நகரம் ஒன்றில் கடைசி சூரிய உதயம்... இனி 84 நாட்களுக்கு இடைவிடாத பகல் ஒளி | Alaskan Town Final Sunrise

50 நாட்கள் கழித்து

இடைவிடாத வெளிச்சம் இருந்தபோதிலும், நள்ளிரவு சூரியன் தோன்றும் காலம் முழுவதும் Utqiaġvik பகுதியில் ஓரளவு குளிராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் ஜூலை மாதம் பொதுவாக ஆண்டின் மிகவும் வெப்பமான மாதமாகும், அந்த மாதத்தில் கூட வரலாற்று ரீதியான அதிகபட்ச வெப்பநிலை வெறும் 49°F ஆகவே இருக்கும். அவ்வப்போது வெப்பநிலை சுமார் 70°F வரை உயரக்கூடும், ஆனால் கோடை மாதங்கள் முழுவதும் பனிப்பொழிவு தொடர்வதே மிகவும் பொதுவானது.

அமெரிக்க நகரம் ஒன்றில் கடைசி சூரிய உதயம்... இனி 84 நாட்களுக்கு இடைவிடாத பகல் ஒளி | Alaskan Town Final Sunrise

நள்ளிரவு சூரியனின் 84 நாட்கள் முடிந்த பிறகும், Utqiaġvik நகரம் முழுமையான இரவு இருளை அனுபவிக்க இன்னும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகும்.

துருவப் பகல் பருவம் முடிவடையும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்குப் பிறகு 50 நாட்கள் கழித்து, அதாவது செப்டம்பர் 21 ஆம் திகதி வரை, சூரியன் முழுமையாக மறையாமல் அடிவானத்திற்குச் சற்று கீழே மறையும். அந்த நாட்களில் Utqiaġvik-கில் இரவில் நிலவும் ஒளிச் சூழல், நீடித்த அந்திப்பொழுதைப் போல இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US