ஹார்முஸில் இராணுவ நகர்வு... பிரான்ஸ், பிரித்தானியாவை எச்சரித்த ஈரான்
ஹார்முஸ் நீரிணைக்கு அனுப்பப்படும் எந்தவொரு போர்க்கப்பல்களும் தங்கள் ஆயுதப் படைகளால் கட்டாயமாகவும் உடனடியாகவும் பதிலடித் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானால் மட்டுமே இயலும்
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தங்கள் போர்க்கப்பல்களை ஹார்முஸ் பகுதிக்கு அனுப்பியுள்ள நிலையிலேயே ஈரானின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஈரானின் துணை வெளிவிவகார அமைச்சர் கசெம் கரிபாபாடி, போர்க்காலமாக இருந்தாலும் சரி, அமைதிக்காலமாக இருந்தாலும் சரி — இந்த நீரிணையில் பாதுகாப்பை நிலைநாட்ட ஈரானிய நிர்வாகத்தால் மட்டுமே இயலும் என்பதையும்,
இத்தகைய விவகாரங்களில் தலையிட வேறு எந்த நாட்டையும் அது அனுமதிக்காது என்பதையும் நாங்கள் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் கடற்படையை நிலைநிறுத்துவதை பிரான்ஸ் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும், மாறாக அது ஈரானுடன் ஒருங்கிணைக்கப்படும் ஒரு பாதுகாப்புப் பணியாகவே இருக்கும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்துள்ளார்.

உறுதியாக இருப்பதாக மேக்ரான்
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் போர்க்கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையில் நகர்வதற்கு எதிராக ஈரான் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், நைரோபியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பாக மீண்டும் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்கும் வகையில் ஓர் சர்வதேசக் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளுக்கு பிரித்தானியாவும் பிரான்சும் தலைமை தாங்கி வருகின்றன.
இருப்பினும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட பின்னரே இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |