அவுஸ்திரேலியாவிற்கு தேவையான எரிபொருள்..சிங்கப்பூருடன் இணைந்த பிரதமர் அல்பனீஸ்
எங்களது சர்வதேச ஆதரவு நாடுகள் மற்றும் நீண்டகால நண்பர்களுடன் இணைந்து எரிபொருள் தேவை பணியை மேற்கொள்வதாக, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் பதிவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர்
மத்திய கிழக்கு போரினால் அவுஸ்திரேலியாவில் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான பரிந்துரையை பிரதமர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) நிராகரித்தார்.
நெடுஞ்சாலை வேக வரம்புகள், விமானப் பயணத்தைக் குறைத்தல் உள்ளிட்ட IEA-வின் பரிந்துரைகளை நிராகரித்த அவர், அந்த பரிந்துரைகள் நிச்சயமாக அவுஸ்திரேலியாவிற்கானவை அல்ல என்றார்.
இந்த நிலையில், சிங்கப்பூருடன் இணைந்து இரு நாடுகளுக்கும் இடையே அத்தியாவசியப் பொருட்களின் பரிமாற்றம் நடைபெறுவதை ஆதரிக்க ஒப்புக்கொண்டதாக அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

எரிபொருளைப் பாதுகாத்து உறுதிசெய்யும் பணி
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "அவுஸ்திரேலியாவிற்குத் தேவையான எரிபொருளைப் பாதுகாத்து உறுதிசெய்யும் பணியில், எங்களின் சர்வதேச ஆதரவாளர்கள் மற்றும் நீண்டகால நண்பர்களுடன் இணைந்து நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இன்று, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஷ்யூன் த்சாய் அவர்களும் நானும், டீசல் போன்ற பெட்ரோலிய எண்ணெய்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உள்ளிட்ட அத்தியாசவசியப் பொருட்களின் பரிமாற்றம், நமது இரு நாடுகளுக்கும் இடையே தடையின்றி நடைபெறுவதை ஆதரிக்க ஒப்புக்கொண்டோம்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதலின் விளைவுகளை நாங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
We’re working to secure the fuel Australia needs with our international partners and longstanding friends.
— Anthony Albanese (@AlboMP) March 23, 2026
Today, Prime Minister @LawrenceWongST of Singapore and I agreed to support the flow of essentials goods including petroleum oils, such as diesel, and liquified natural gas… pic.twitter.com/BVvMbX70ep
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |