துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ட்ரம்ப் குறித்து பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ்
டொனால்ட் ட்ரம்ப், மெலானியா ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைவதாக, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உயிர்த்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா மற்றும் மூத்த அமைச்சரவை உறுப்பினர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து காயமின்றி இருந்ததில் அவுஸ்திரேலிய ஜனாதிபதி அந்தோனி அல்பானீஸ் தனது நிம்மதியைப் பகிர்ந்துகொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஜனாதிபதியும் முதல் பெண்மணியும், வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் கலந்துகொண்ட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்" என கூறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |