ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு 6,000 டொலர் அபராதம் விதிக்கும் ஐரோப்பிய நாடொன்று

Europe Albania Protest
By Arbin Oct 29, 2026 06:39 AM GMT
Report

Albania imposes $6,000 fine for demonstrators: அல்பேனியா ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு 6,000 டொலர் அபராதம் விதிக்கிறது.

வன்முறையாக மாறும் போராட்டங்களில் பங்கேற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு, 6,000 டொலருக்கும் அதிகமான அபராதத்தை விதிக்க ஐரோப்பிய நாடான அல்பேனியா முடிவு செய்துள்ளது.

புதிய சட்ட நடவடிக்கை

பிரதமரின் பதவி விலகலைக் கோரும் போராட்டங்களை அரசாங்கம் ஒடுக்க முயலும் சூழலில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தனிப்பட்ட முறையில் வன்முறைச் செயல்களில் ஈடுபடாவிட்டாலும் கூட இந்த அபராதம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு 6,000 டொலர் அபராதம் விதிக்கும் ஐரோப்பிய நாடொன்று | Albania Imposes Fine For Demonstrators

தலைநகரான திரானாவில், பல மாதங்களாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன; கடந்த சில நாட்களில் இவை பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான தீவிர மோதல்களாக உருவெடுத்துள்ளன.

வழிநடத்தும் தலைவர் எவருமற்ற இந்த மக்கள் இயக்கம் மே மாதம் அமைதியான முறையில் தொடங்கியது; இயற்கை காப்பகம் ஒன்றில் ஆடம்பர ஹொட்டல் திட்டத்தை அமைப்பதற்கு எதிராகப் பேரணிகள் நடத்தப்பட்டன.

68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின்

68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின்

ஹொட்டல் கட்டும் இந்தத் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் ஆதரவு இருந்தது. அக்டோபர் மாத நடுப்பகுதியில், 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அல்பேனியாவில், ஊழல், சுகாதார அமைப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் இளைஞர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் இன்மை ஆகியவற்றிற்கு எதிராக, மாணவர்கள் முன்னெடுத்த போராட்ட அலையாக இது உருவெடுத்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு 6,000 டொலர் அபராதம் விதிக்கும் ஐரோப்பிய நாடொன்று | Albania Imposes Fine For Demonstrators

இந்த நிலையில், கடும் நெருக்கடிக்கு உள்ளான பிரதமர் எதி ராமா தலைமையிலான அரசாங்கம் புதன்கிழமையன்று புதிய சட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டது.

இதன்படி, பொது இடத்தில் வன்முறையில் ஈடுபடும் அல்லது கொள்ளையடிக்கும் ஒரு கூட்டத்தில் தொடர்ந்து நீடிக்கும் நபர்களுக்கும், அல்லது அவ்விடத்தில் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொள்ளும் நபர்களுக்கும் 500,000 லெக்குகள் (சுமார் 6,130 அமெரிக்க டொலர்கள்) வரை அபராதம் விதிக்கப்படும்.

உடனடியாக அமுல்

இதனிடையே, வன்முறை ஏற்படும் அபாயம் இருந்தால், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அல்பேனிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள், இணையவழியில் வன்முறையைத் தூண்டுபவர்கள் மீதான தடைகளையும், போராட்டங்களின் போது சேதமடைந்த சிறு வணிகங்களுக்கான இழப்பீட்டையும் வழங்குகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு 6,000 டொலர் அபராதம் விதிக்கும் ஐரோப்பிய நாடொன்று | Albania Imposes Fine For Demonstrators

இந்த நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன; இருப்பினும், இவை தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டுமானால், 45 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய பிரதமர் ராமா, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மேலவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட மசோதா ஒன்றால் தான் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்; அந்த மசோதாவின்படி, வீதிப் போராட்டங்களின் போது ஏற்படும் சேதங்களுக்குப் போராட்டக்காரர்களே நிதி ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாகும்.

இதனிடையே, அல்பேனிய மக்களின் வரிக்கு முந்தைய சராசரி மாதச் சம்பளம் 1,026 டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US