கர்ப்பமான AI அமைச்சர்; 83 குழந்தைகளுக்கு தாய் - அல்பேனிய பிரதமர் அறிவிப்பு
AI அமைச்சர் கர்ப்பமாக உள்ளதாக அல்பேனிய பிரதமர் அறிவித்துள்ளார்.
உலகில் முதல் AI அமைச்சர்
கடந்த செப்டம்பர் மாதம், அல்பேனியா அரசு உலகில் முதல் நாடாக AI அமைச்சரை அறிமுகப்படுத்தியது.

டியெல்லா(Diella) என பெயரிடப்பட்டுள்ள இந்த AI அமைச்சர், பொது டெண்டர்கள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம், 100 சதவீதம் ஊழல் இல்லாமல், டெண்டருக்கு சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு பொது நிதியும் முற்றிலும் வெளிப்படையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
83 குழந்தைகளுக்கு தாய்
தற்போது AI அமைச்சர் டியெல்லா கர்ப்பமாக உள்ளதாகவும், 83 குழந்தைகளுக்கு தாயாக போவதாகவும் பெர்லினில் நடந்த BGD நிகழ்வில் அல்பேனியா பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார்.
🇦🇱 Video: PM Edi Rama annouces his AI Minister Diella is "pregnant." pic.twitter.com/kmZf2xE7md
— kos_data (@kos_data) October 25, 2025
அதாவது, நாடாளுமன்றத்தில் உள்ள 83 சோசலிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை(AI உதவியாளர்) இருப்பார்.
இந்த குழந்தைகள் நாடாளுமன்றத்தில் நடக்கும் அனைத்தையும் பதிவு செய்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறவிட்ட விவாதங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து அவர்களுக்கு தெரிவிப்பார்கள்.

இந்த குழந்தைகள் அவர்களுடைய தாயின் அறிவை பெற்றிருப்பார்கள். 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த நடைமுறை முழுவதுமாக பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |