கனேடிய மாகாணமொன்று ஓட்டுநர் உரிமங்களில் செய்யவிருக்கும் சர்ச்சைக்குரிய மாற்றம்: புலம்பெயர்தல் நிபுணர்கள் விமர்சனம்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், ஓட்டுநர் உரிமம் மற்றும் அடையாள அட்டையில், ஒருவரது குடியுரிமை குறித்த அடையாளம் ஒன்றை சேர்ப்பதை கட்டாயமாக்க உள்ளது.
ஓட்டுநர் உரிமத்தில் குடியுரிமை குறித்த விவரம்
ஆல்பர்ட்டா மாகாணம், மக்களுடைய ஓட்டுநர் உரிமம் மற்றும் அடையாள அட்டையில் அவர்கள் கனேடிய குடிமக்கள் என்பதைக் காட்டும் அடையாளம் ஒன்றைச் சேர்க்க முடிவு செய்துள்ளது.
NEW: Alberta will be the first province to add a Canadian citizenship marker to driver’s licences and ID cards, strengthening Alberta’s election system and protecting the integrity of our democratic process by ensuring that only eligible citizens cast ballots.
— Danielle Smith (@ABDanielleSmith) September 15, 2025
This change will… pic.twitter.com/Ottia0uBXJ
அதாவது, இனி ஒருவருடைய ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாள அட்டையைப் பார்த்தாலே அவர் கனேடிய குடிமகனா என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.
இந்த திட்டம் 2026ஆம் ஆண்டு அமுலுக்கு வருவதாக ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான Danielle Smith தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம், பல விடயங்களை விரைவாகவும், எளிதாகவும், மேம்பட்ட முறையிலும் மாற்ற உதவும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், புலம்பெயர்தல் அமைப்புகளும், சட்ட அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக, கனேடிய குடிமகன் அல்லாத ஒருவர் உணவகம் ஒன்றிற்குச் செல்லும்போதோ, வாகன சோதனைக்குட்படுத்தப்படும்போதோ, அல்லது வீடு வாடகைக்கு எடுக்க முயலும்போதோ, அவர்கள் பாரபட்சமாக நடத்தப்பட இந்த திட்டம் வழிவகை செய்யலாம் என அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |