பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் நீண்ட நேரம் நீடித்த இறுதிப்போட்டி! ஸ்பெயின் சாம்பியன் பெற்ற பரிசுத்தொகை
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற கார்லோஸ் அல்காரஸ் 2.9 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகையை பெற்றார்.
கார்லஸ் அல்காரஸ்
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜானிக் சின்னர் மற்றும் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் மோதிய பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டியில் மோதினர்.
முதல் இரண்டு செட்களில் 6-4 மற்றும் 7-6 என ஜானிக் சின்னர் (Jannik Sinner) முன்னிலை வகித்தார். ஆனால், அடுத்த இரண்டு செட்களில் கார்லோஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) மீண்டெழுந்து 6-4 மற்றும் 7-6 என மிரட்டினார்.
இறுதியில் 7-6 என கடைசி செட்டைக் கைப்பற்றி இரண்டாவது முறையாக கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தப் போட்டி 5 மணிநேரம் 29 நிமிடங்கள் வரை நீடித்ததால், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நீடித்த இறுதிப்போட்டியாக சாதனைப் பட்டியலில் பதிவானது.
புதிய சகாப்தம்
இதன்மூலம் ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடாலைப் போல் அல்காரஸ், சின்னர் புதிய சகாப்தம் படைத்துள்ளனர்.
இதற்கு முன்பு 1982ஆம் ஆண்டில் 4 மணிநேரம் 47 நிமிடங்கள் நீடித்ததே, பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் நீண்ட நேர இறுதிப் போட்டியாக இருந்தது.
சாம்பியன் பட்டம் வென்ற 22 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் 2.9 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் 24 கோடி ரூபாய்) பரிசு பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |