அமெரிக்க ஓபனில் வரலாறு காணாத பரிசுத்தொகையை வென்ற அல்கராஸ்! எவ்வளவு தெரியுமா?
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கார்லோஸ் அல்கராஸ் மிகப்பெரிய பரிசுத்தொகையைப் பெற்றார்.
அல்கராஸ்
நியூயார்க் நகரில் ATP அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது.
இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் இத்தாலியின் ஜென்னிக் சின்னர் ஆகிய இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்லோஸ் அல்கராஸ் (Carlos Alcaraz) 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஜென்னிக் சின்னரை (Jannik Sinner) வீழ்த்தி வெற்றிவாகை சூடினார்.
5 மில்லியன் டொலர்கள்
இது அவரது இரண்டாவது அமெரிக்க ஓபன் பட்டம் மற்றும் 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
பட்டம் வென்ற அல்கராஸ் 5 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகையை வென்றார். இது அமெரிக்க ஓபனில் மிகப்பெரிய பரிசுத்தொகை ஆகும்.
இதற்கு முன் 2024யில் பரிசுத்தொகை 3.6 மில்லியன் டொலர்களாக இருந்தது. இரண்டாம் இடம்பிடித்த சின்னர் 2.5 மில்லியன் டொலர்களை பரிசாக பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |