கருங்கடல் கடற்கரையில் கரை ஒதுங்கிய எண்ணெய்: ரஷ்ய பிராந்தியத்தில் எச்சரிக்கை
Alert in Russia's krasnodar for oil washes ashore: ரஷ்யாவின் கிராஸ்னோடர் பிராந்தியத்தில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
கருங்கடல் கடற்கரையில் எண்ணெய் கரை ஒதுங்கியதால், ரஷ்யாவின் கிராஸ்னோடர் பிராந்தியத்தில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் எண்ணெய்
கருங்கடல் கடற்கரைப் பகுதியில் எரிபொருள் எண்ணெய் கரை ஒதுங்கியது. அத்துடன் செயற்கைகோள் படங்கள் மூலம் மாசு பரவுவது தெரிய வந்துள்ளது.
உக்ரேனிய கடற்படை ட்ரோன்களால் தாக்கப்பட்ட கப்பல்களுடன் தொடர்புடைய விபத்துகளே, இந்த எண்ணெய் கசிவுக்குக் காரணம் என ஆளுநர் வெனியாமின் கொண்ட்ராத்யேவ் தெரிவித்தார்.
அதேபோல், நோவோரோசிஸ்க் நகருக்கு அருகிலுள்ள 500 மீற்றர் நீளமுள்ள கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே எரிபொருள் எண்ணெய் காணப்பட்டுள்ளதாக, அந்நகரின் தலைமை மீட்பு அதிகாரி அலெக்ஸி ஓடெரோவ் தெரிவித்தார். கரையோரங்களில் மாசு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை நிலை
மேலும், பெட்ரோலியப் பொருட்களில் இருந்து இரசாயன தீக்காயங்களுடன் பறவைகள் கெலென்ட்ஜிக் மற்றும் அருகிலுள்ள ரிசார்ட் கிராமமான ஆர்கிபோ-ஒசிபோவ்காவில் கண்டறியப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் தெற்குப் பகுதியான கிராஸ்னோடர் பிராந்தியத்தில் உள்ள கெலென்ட்ஜிக் மற்றும் நோவோரோசிஸ்க் ஆகிய நகரங்களில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆளுநர் வெளியிட்ட இந்த எச்சரிக்கை உத்தரவு சுற்றுச்சூழல் கண்காணிப்பை அதிகரிக்கவும், தொழில்சார் அபாயங்கள் குறித்த கண்காணிப்பை பலப்படுத்தவும் வலியுறுத்துகிறது.
