1500 கோடிக்கு 25 வயது வீரர் ஒப்பந்தம்! லிவர்பூல் அணி குறித்து அவர் கூறிய விடயம்
நியூகேஸில் யுனைடெட் வீரரான அலெக்ஸாண்டர் ஐசாக் லிவர்பூல் அணியில் இணைவது ஒரு நீண்ட பயணம் என குறிப்பிட்டார்.
அலெக்ஸாண்டர் ஐசக்
சுவீடன் வீரரான அலெக்ஸாண்டர் ஐசக் (Alexander Isak) நியூகாஸில் யுனைடெட் அணியில் விளையாடி வந்தார்.
அந்த அணிக்காக ஐசக் 86 போட்டிகளில் விளையாடி 54 கோல் அடித்துள்ளார். அவரை லிவர்பூல் அணி பாரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது.
அதாவது 125 மில்லியன் மற்றும் add-ons அடிப்படையில் 5 மில்லியன் பவுண்டுகள் என மொத்தம் 130 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ.1533 கோடி) ஐசக் ஒப்பந்தமாகியுள்ளார்.
25 வயதான அலெக்ஸாண்டர் ஐசக், நியூகேஸில் உடனான தனது மூன்று சீசன்களில் பிரீமியர் லீக்கின் முன்னணி தாக்குதல் வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்
இந்த நிலையில் லிவர்பூல் அணியில் இணைந்தது குறித்து பேசிய ஐசக், " நான் ஆச்சரியமாக உணர்கிறேன். இங்கு வருவது ஒரு நீண்ட பயணம். ஆனால் இந்த அணி, இந்த கிளப் மற்றும் அது குறிக்கும் அனைத்திலும் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். மீண்டும் நான் விளையாடுவதிலும் இதனை முடித்ததிலும் மகிழ்ச்சியடைகிறேன். எனது அணியினர் மற்றும் ரசிகர்களைப் பார்க்கவும், மீண்டும் அங்கு செல்லவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.
அலெக்ஸாண்டர் ஐசக் தனது தேசிய அணியான சுவீடனுக்காக 52 போட்டிகளில் 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |