புடினை எதிர்த்த அலெக்ஸி நவல்னி இறப்பதற்கு முன்பு விஷம் குடித்துள்ளார்! மனைவி யூலியா பகீர்
ரஷ்யாவில் கடந்த ஆண்டு அலெக்ஸி நவல்னி இறப்பதற்கு முன்பு விஷம் குடித்ததை, இரண்டு தனித்தனி மருத்துவ ஆய்வக முடிவுகள் காட்டுவதாக அவரது மனைவி யூலியா நவல்னயா தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான எதிர்ப்பு
ஊழல் எதிர்ப்பு விசாரணைகள் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) வெளிப்படையான எதிர்ப்பு ஆகியவற்றால் பிரபலமடைந்தவர் அலெக்ஸி நவல்னி(Alexei Navalny).
இவர் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் திடீரென இறந்தது ரஷ்ய அரசியலில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஏனெனில், அவரது மரணத்தின் சூழ்நிலைகளை விசாரிக்க ரஷ்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து கணவரின் உயிரியல் மாதிரிகள் கடந்த பிப்ரவரியில் பெறப்பட்டதாகவும், பின்னர் வெளிநாட்டிற்கு பாதுகாப்பாக கடத்தப்பட்டதாகவும் அவரது மனைவி யூலியா நவல்னயா கூறியுள்ளார்.
அடையாளம் காட்டவில்லை
மேலும் அவர், இரண்டு வெவ்வேறு நாடுகளில் உள்ள ஆய்வகங்கள் தனது கணவர் விஷம் குடித்ததாக சுயாதீனமாக முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆய்வக சோதனைகள் நடத்தப்பட்ட நாடுகளையோ அல்லது அவரது கணவரின் மரணத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விஷப் பொருளையோ அவர் அடையாளம் காட்டவில்லை.
எனினும், ஐரோப்பாவிலோ அல்லது வட அமெரிக்காவிலோ ஆய்வக சோதனைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று யூலியா மறைமுகமாக கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |