ஈரானின் புதிய உச்சத்தலைவராக காமெனியின் மகன் மொஜ்தபா தேர்வு - யார் இவர்?

Iran Ayatollah Ali Khamenei Israel-Iran conflict
By Karthikraja Mar 04, 2026 05:34 AM GMT
Report

ஈரானின் புதிய உச்சத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். 

ஈரானின் புதிய உச்சத்தலைவராக காமெனியின் மகன் மொஜ்தபா தேர்வு - யார் இவர்? | Ali Khamenei Son Mojtaba Iran New Supreme Leader

இதனையடுத்து, ஈரானின் இடைக்கால தலைமை கவுன்சிலின் தலைவராக அயாத்துல்லா அலிர்சா அராஃபி நியமிக்கப்பட்டார். இது கிட்டத்தட்ட உச்சத் தலைவர் பதவிக்கு நிகரானது.

உச்சத் தலைவரை தேர்வு செய்யும் வரை, அயாத்துல்லா அலிர்சா அராஃபி, திபர் மசூத் பெசெஷ்கியான், தலைமை நீதிபதி கோல்ம்ஹொசைன் மொஹ்செனி எஜீ ஆகிய 3 பேர் கொண்ட சபை நாட்டை வழிநடத்தும். 

காமெனி மீதான தாக்குதல் குறித்து எச்சரித்த சீனா - நடந்தது என்ன?

காமெனி மீதான தாக்குதல் குறித்து எச்சரித்த சீனா - நடந்தது என்ன?

மொஜ்தபா கமேனி

இந்நிலையில், அலி காமெனியின் 2வது மகனான மொஜ்தபா கமேனியை (Mojtaba Khamenei), 88 ஷியா மதகுருமார்களைக் கொண்ட வல்லுநர் குழு ஈரானின் புதிய உச்சத்தலைவராக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரானின் புதிய உச்சத்தலைவராக காமெனியின் மகன் மொஜ்தபா தேர்வு - யார் இவர்? | Ali Khamenei Son Mojtaba Iran New Supreme Leader

56 வயதான மொஜ்தபா கமேனி, ஈரானில் எந்த அரசியல் பதவியை வகிக்காமல் இருந்தாலும், திரைமறைவில் செல்வாக்கு மிகுந்த நபராக வலம் வந்துள்ளார்.

மொஜ்தபா மூத்த மதகுருவாக இல்லாமல் இருந்தாலும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடம் (IRGC) மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக அறியப்பட்டார்.

IRGCயின் அழுத்தத்தின் பேரிலே மொஜ்தபாவை நிபுணர்கள் குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பம்

மொஜ்தபா, கடந்த 2004 ஆம் ஆண்டில் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான கோலம்-அலி ஹடாத்-அடேலின் மகள் ஜஹ்ரா ஹடாத்-அடேலை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளது.

இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில் இவரின் பெற்றோர், மனைவி உள்ளிட்டோர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரானின் புதிய உச்சத்தலைவராக காமெனியின் மகன் மொஜ்தபா தேர்வு - யார் இவர்? | Ali Khamenei Son Mojtaba Iran New Supreme Leader

மொஜ்தபா 1987 - 1988 கலாகட்டதில் நடைபெற்ற ஈராக் - ஈரான் போரில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், 2009 தேர்தலுக்கான போராட்டங்களை அடக்குவதற்கு பாசிஜஜ் அமைப்பை கட்டுப்பாட்டில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சொத்துமதிப்பு

ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, மொஜ்தபா உலகளாவிய சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்ததாகவும் அவர் மேற்கத்திய சந்தைகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்களுக்கு நிதியை செலுத்தினார் . 

ஈரான் மீதான போர் - ஒரு நாளைக்கு அமெரிக்காவிற்கு ஆகும் செலவு என்ன தெரியுமா?

ஈரான் மீதான போர் - ஒரு நாளைக்கு அமெரிக்காவிற்கு ஆகும் செலவு என்ன தெரியுமா?

அவரது நிதி சொத்துக்களில் 138 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிரித்தானிய சொத்து மற்றும் சுவிஸ் வங்கிக் கணக்குகள் அடங்கும் என்று கூறுகிறது.

அதிகாரங்கள்

ஈரானின் உச்சத்தலைவர் என்பவர் நாட்டின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ளார்.

இவரே ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஆவார். நீதித்துறை, அரசு ஊடகங்கள் மற்றும் புரட்சிகர காவல்படை(IRGC) உள்ளிட்ட முக்கிய இராணுவ அமைப்புகளின் தலைவர்களை அவர் நியமிக்கிறார்.

நாட்டின் அடிப்படை கொள்கைகளை வடிவமைத்தல், ராணுவம், வெளியுறவுக் கொள்கை மற்றும் நீதித்துறை என அனைத்திலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இவருக்கே உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US