அயோத்தி விழாவில் ஆலியா பட் அணிந்திருந்த புடவையின் சிறப்பு என்ன தெரியுமா? - பின்னணியில் இருக்கும் உண்மை
அயோத்தியில் நிகழ்ந்த குடமுழுக்கு விழாவில் கலந்துக்கொண்ட பாலிவுட் நட்சத்திர ஆலியா பட் அணிந்திருந்த ஆடையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பின்னணியில் இருக்கும் உண்மை
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கங்கனா ரனாவத், சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆலியா பட் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் விதவிதமாக செல்வார். அது பலரையும் அதிகமாக ஈர்த்துள்ளது எனலாம்.
அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துக் கொண்ட அலியா பட் , ராமாயணக் கருப்பொருளைக் கொண்ட நீல நிற மைசூர் பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.
புடவையின் ஓரத்தில் ராமாயணத்தின் முக்கியமான காட்சிகள் கை ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதை செய்து முடிக்கு சுமார் இரண்டு கலைஞர்கள் 10 நாட்கள் 100 மணிநேரம் கடினமாக உழைத்துள்ளனர்.
ராமாயணக் காட்சியின் படங்கள்
ராமர், மன்னன் தசரதன் வாக்குறுதியை மீறுவது, குகனுடன் படகில் சென்றது, தங்க மான், ராமர் சேது, ஹனுமான் மற்றும் ராமர் பட்டாபிஷேகம் போன்ற ராமாயணத்தின் பின்வரும் காட்சிகள் இருந்துள்ளது.
புடவையின் விலை சுமார் 45,000 ரூபாய் ஆகும் என புடவை வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |