சளி, இருமலை விரட்டியடிக்கும் இஞ்சி மரப்பா செய்வது எப்படி?
பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு இஞ்சி நீண்ட காலமாக உதவி வருகிறது.
உதாரணமாக, செரிமான பிரச்சனைகளை தீர்க்க பெரும்பாலும் இஞ்சி வேர் மற்றும் தேநீரை பலர் பயன்படுத்துகிறார்கள்.
இஞ்சி உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. உணவு மற்றும் தண்ணீரில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால், கிருமிகளை எதிர்த்துப் போராடலாம்.
மேலும் குளிர் காலத்தில் பொதுவாக ஏற்படக்கூடிய சளி, இருமல், கரகரப்பான தொண்டை போன்ற சிக்கலை எதிர்த்து போராட உதவுவதும் இந்த இஞ்சியாக தான் இருக்கும்.
அந்தவகையில் இஞ்சி மரப்பா பலருக்கு உதவுகிறது. சளி மற்றும் இருமலையும் விரட்டியடிகிறது. உடல் வெப்பத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இதை எப்படி இலகுவாக வீட்டிலேயே செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
இஞ்சி - 100 கிராம்
- வெல்லம் - 200 கிராம்
- நெய் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
-
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன் அளவு
- கருமிளகு
- வறுத்த எள் - ஒரு கைப்பிடி
செய்முறை
-
முதலில் இஞ்சியை கரி பிடிக்காமல் தீயில் வாட்டி எடுக்கவும்.
-
பின் வாட்டிய இஞ்சியை தண்ணீரில் சேர்த்து குளிர வைத்து, இஞ்சி தோலை உரித்து துண்டு துண்டாக நறுக்கி எடுக்கவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி வெல்லம் சேர்த்து உருக்க வேண்டும்.
-
உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் நறுக்கி வைத்த இஞ்சியை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
-
வதக்கிய கலவையானது கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
- இறுதியாக எள் சேர்த்து வெட்டி எடுத்துக்கொண்டால் சளி, இருமலை விரட்டியடிக்கும் இஞ்சி மரப்பா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |