"ஏலியன்ஸ் வந்துவிட்டனர்! மூன்றாம் உலகப்போர் தொடங்கவுள்ளது" அமெரிக்க மூத்த இராணுவ அதிகாரி பரபரப்பு தகவல்!
அமெரிக்காவில் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் வேற்றுகிரகவாசிகளால் மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம் என்று ஒரு பரபரப்பான மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார்.
அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் பணிபுரிந்த ராபர்ட் சலாஸ் (Robert Salas), வேற்றுகிரகவாசிகள் அணுஆயுத ஏவுகணைகளை திருடுவதை பார்த்ததாக கூறியுள்ளார்.
மேலும், 4 அமெரிக்க விமானப்படைத் தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை மிக விரைவில் வெளியிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சலாஸ் அமெரிக்க விமானப்படையில் ஒரு ஆயுதக் கட்டுப்பாட்டாளராக இருந்தார், மேலும் அவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பிரிவின் கமாண்டராக இருந்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் மிக நவீன மற்றும் அழிவுகரமான அணு ஏவுகணை திட்டமாக கருதப்படும் Titan-3 திட்டத்தில் விமானப்படை ஏவுகணை உந்துவிசை பொறியாளராகவும் சலாஸ் பணியாற்றியுள்ளார்.
சலாஸ் 1971 முதல் 1973 வரை Martin-Marita Aerospace and Rockwell International on Space Shuttle-ன் நம்பகத்தன்மை பொறியாளராகவும் பணியாற்றினார்.
சாலாஸின் கூற்றுப்படி, வேறொரு கிரகத்திலிருந்து வந்த வேற்றுகிரகவாசிகள் அணு இலக்குகளில் ஆயுத அமைப்புகளில் முறைகேடு செய்து அவற்றை முடக்கியதாக கூறியுள்ளார்.
வேற்றுகிரகவாசிகளும் ஏவுகணை தத்தை அமைத்து அதன்மூலம் ஏவுகணைகளைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள் என்றும் மொத்தம் 10 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயலிழந்தன என்றும் சாலாஸ் கூறியுள்ளார்.
மார்ச் 24, 1967 அன்று மால்ம்ஸ்ட்ரோம் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தடி ஏவுகணை கட்டுப்பாட்டு வசதியின் தளபதியாக சலாஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்தை விசாரிக்க அமெரிக்க காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக சலாஸ் கூறினார்.