சச்சினின் கடைசி உலகக்கிண்ணம்.,நான் விளையாட விரும்பிய தருணம் - ஆசியப்போட்டியில் மிரட்டிய வீரர்
2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணம்தான் தனது முதல் கிரிக்கெட் நினைவு என்று சச்சின் டெண்டுல்கரையும் குறிப்பிட்டு அமீரக இளம் வீரர் அலிஷான் ஷரஃபு பேசியுள்ளார்.
அலிஷான் ஷரஃபு
அபுதாபியில் நடந்து வரும் ஓமன் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணப் போட்டியில், ஐக்கிய அரபு அமீரக வீரர் அலிஷான் ஷரஃபு 38 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
இந்த போட்டிக்கு முன்பாக பேசிய அலிஷான் ஷரஃபு, தனக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் குறித்து பேசினார்.
அவர், "கிரிக்கெட்டைப் பற்றிய என் முதல் நினைவு 2011 உலகக்கிண்ணம்தான். நான் அப்போது வெளிப்படையாக இந்தியாவை ஆதரித்தேன்.
அவர்கள் அதனை வென்றார்கள். அது சச்சினின் கடைசி உலகக்கிண்ணம், அதுதான் நான் விளையாட விரும்பிய தருணம். அப்போதுதான் கிரிக்கெட் ஒரு ஆர்வமாக மாறியது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |