பிரித்தானியா பயணிகளுக்கு தடை விதித்த 30 நாடுகள்! வெளியான முழு பட்டியல்
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 30 நாடுகள் பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.
கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமைக்ரன் வைரஸ் பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருவதால், பிரித்தானிய பயணிகளால் ஏற்படும் ஆபத்தை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், தற்போது உலகில் உள்ள 30 நாடுகள் பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளன.
Germany
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் மாறுபாடு, கவலைக்குரிய வகையில் உள்ளது.
இதனால் பிரித்தானியா கொரோனாவால் ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை(18.12.2021) ஜேர்மனி அறிவித்தது. அதன் படி இரண்டு தடுப்பூசி போட்டிருந்தாலும், பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் கட்டாய இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளது.
France
கடந்த 17-ஆம் திகதி பிரான்ஸ் அரசு பிரித்தானியா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன் படி, பிரித்தானியாவில் பிரான்ஸ் வருபவர்களுக்கு என்ன காரணம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அது சுற்றுலா அல்லது தொழில் காரணங்களுக்காக என்றால் அவர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
India
இந்தியாவிற்குள் நுழைந்தால், பயணம் செய்வதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
Australia
இங்கு, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நாட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமக்கள், அவுஸ்திரேலியா குடிமக்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆகியோர் அனுமதிக்கப்படுவர்.
இதைத தவிர மற்ற வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுவதில்லை.
China
பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து நேரடி விமானங்களையும், சீனா தடை செய்துள்ளது. நியூசிலாந்து பயணம் செய்வதற்கு முக்கியமான நோக்கம் உள்ள பிரித்தானியா பயணிகள் மட்டுமே நியூசிலாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
Japan
வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஏற்கனவே கடுமையான விதிகளை வைத்திருந்த ஜப்பான், ஒமைக்ரான் பரவல் காரணமாக குடிமக்கள் இல்லாத வெளிநாட்டு பயணிகளுக்கு தற்போது தடை விதித்துள்ளது. ஒ
மைக்ரான் மாறுபாடு பற்றிய தெளிவான தகவல்கள் கிடைக்கும் வரை, இந்த நடவடிக்கை தொடரும் என்று ஜப்பான் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
South Korea
தென் கொரியா வரும் பிரித்தானியா பயணிகள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்றவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு விருந்தினர்களாக வந்திருப்பவர்கள், தங்களுடைய தங்கும் காலம் வரை தங்களுடைய அறைகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
Israel
நாட்டில் உள்ள பிரத்யேக விதிவிலக்கு குழுவிடம் இருந்து, சிறப்பு நுழைவு அனுமதி பெற்றால் மட்டுமே இஸ்ரேல் அல்லாத குடிமக்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
New Zealand
நியூசிலாந்தை பொறுத்தவரை பிரித்தானியா உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் தடை விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள நாடுகள் பிரித்தானியா பயணிகளுக்கு தடை விதித்துள்ளன
- Qatar
- Hong Kong
- Morocco
- Falkland Islands
- Suriname
- Papua New Guinea
- Pitcairn Islands
- Tonga
- Cook Islands
- Nauru
- Turkmenistan
- Bhutan
- Laos
- Kuwait
- Macao
- Iran
- Mongolia
- Myanmar
- Benin
- Eritrea
- Gabon