இனி இப்படி தான் இருக்கும்! தலிபான் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என நாட்டின் பெயரை மாற்றினர். மேலும், தலிபான் கொடியை அரசின் கொடியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் செல்லுமா என ஆப்கானியர்களிடையே கவலை நிலவி வருகிறது.
தற்போது, அடையாள அட்டைகள் தொடர்பில் மக்களிடையே நிலவி வரும் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வமாக தலிபான் தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரக செய்தித் தொடர்பாளரும், துணை அமைச்சருமான Zabihullah Mujahid அறிவித்ததாக மேற்கோள் காட்டி தலிபான் அரசு நடத்தும் Bakhtar News Agency வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து அடையாள அட்டைகளும் பாஸ்போர்ட்டுகளும் செல்லுபடியாகும்.
ஆனால் எதிர்காலத்தில் வழங்கப்படும் அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ‘இஸ்லாமிய எமிரேட்’ என்ற பெயரைக் கொண்டிருக்கும் என Zabihullah Mujahid அறிவித்துள்ளதாக Bakhtar News Agency தெரிவித்துள்ளது.