சிரியாவில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள கவலை! இந்திய தூதரகம் வழங்கிய தகவல்
சிரியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் பதற்றம்
கிளர்ச்சியாளர்கள் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து ஜனாதிபதி பஷார் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறி மாஸ்கோவிற்கு விமானம் மூலம் தப்பிச் சென்றார்.
இதையடுத்து அவரது அரசு கலைக்கப்பட்டு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சிரியா வந்துள்ளது.
இதனால் சிரியாவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியர்கள் பாதுகாப்பு
இந்நிலையில் சிரியாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சிரியாவில் உள்ள இந்திய தூதரகம் தங்களது நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களிடம் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆதாரங்கள் வழங்கிய தகவலில்,இந்திய தூதரகம் சிரியாவில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
தரவுகளின் படி, 14 ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் உட்பட 90 இந்தியர்கள் சிரியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |