மத்திய சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்: இஸ்லாமிய அரசுக்கு எதிராக நடவடிக்கை
மத்திய சிரியா மீது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய சிரியா மீது தாக்குதல்
கிளர்ச்சியாளர்கள் படைகளிடம் சிரிய ராணுவம் பின்வாங்கியதை அடுத்து ஜனாதிபதி பஷார் அல்-அசாத்(Bashar al Assad) நாட்டை விட்டு வெளியேறி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு தப்பி சென்றுள்ளார்.
இதனால் அசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்து இருப்பதோடு, கிளர்ச்சியாளர்கள் படை சிரியாவில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
அமெரிக்கா தாக்குதல்
இந்நிலையில் மத்திய சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு நிலைகள் மீது அமெரிக்கா டஜன் கணக்கான வான்வழி தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து அதன் இடத்தை இஸ்லாமிய அரசு நிரப்பி விடாமல் இருக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை பிரிவு தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
75 இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவின் B-52s, F-15s, மற்றும் A-10s ஆகிய விமானப்படை சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |