மனிதர்களுக்கான வாஷிங் மெஷின்: ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு!
ஜப்பான் நிறுவனம் ஒன்று மனிதர்களை சுத்தம் செய்யும் சலவை இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
மனிதர்களுக்கான வாஷிங் மெஷின்
துணிகளை துவைப்பது போல, இனி மனிதர்களையும் சுத்தப்படுத்தலாம்! ஆம், இது உண்மைதான்.
ஜப்பானிய நிறுவனமான சயின்ஸ் கோ., நிறுவனம் உருவாக்கியுள்ள 'மிரைய் நிங்கன் சென்டாகுக்' என்ற இயந்திரம், 15 நிமிடங்களில் நம்மை முழுமையாக சுத்தப்படுத்தும்.
இயந்திரம் எப்படி வேலை செய்கிறது?
இந்த இயந்திரம் மேம்பட்ட தண்ணீர் ஜெட் மற்றும் நுண்ணிய காற்று குமிழ்கள் மூலம் ஸ்பா போன்ற அனுபவத்தை வழங்குகிறது.
வெதுவெதுப்பான நீர் நிரம்பிய இந்த இயந்திரத்தில் அதிவேக நீர் மற்றும் நுண்ணிய குமிழ்கள் உங்கள் உடலில் பட்டு அழுக்குகளை அகற்றும்.
A.1 மூலம் உங்கள் உடல் அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு, தண்ணீரின் அழுத்தம் மற்றும் வெப்பநிலை தானாகவே சரி செய்யப்படும்.
இந்த இயந்திரம் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் அமைதியான மற்றும் புத்துணர்ச்சியான அனுபவத்தை வழங்குகிறது.
எப்போது கிடைக்கும்?
இந்த நவீன இயந்திரம் ஒசாகா எக்ஸ்போ -2025ல் அறிமுகமாகவுள்ளது.
கண்காட்சியில் 1,000 பேர் நேரடியாக இந்த இயந்திரத்தை பயன்படுத்தி பார்க்க உள்ளனர். தற்போது இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
HumanWashingMachine, Japan, ScienceCo, FutureTechnology