அமெரிக்கா நிச்சயம் அழியும்..!ஒன்று சேர்கிறார்களா ரஷ்யா, சீனா, வட கொரியா? ஹமாஸ் எச்சரிக்கை
அமெரிக்கா ஒரு நாள் நிச்சயம் அழியும் என ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவர் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் 4வது வாரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2ம் திகதி லெபனான் யூடியூப் சேனலுக்கு ஹமாஸின் மூத்த தளபதியான அலி பராக்கா அளித்த பேட்டியில், அமெரிக்காவுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Reuters
அதில், சோவியத் ஒன்றியம் எவ்வாறு அழிந்ததோ, அதைப் போல அமெரிக்காவும் நிச்சயம் ஒரு நாள் அழியும் என எச்சரித்துள்ளார்.
ஒன்று சேரும் எதிர்கள்
அத்துடன் அமெரிக்காவின் அனைத்து எதிரிகளும் ஒன்றாக கூடி ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக நெருங்கி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் போரில் ஒன்றாக சேரும் நாளில் அமெரிக்கா என்பது கடந்த காலமாக மாறிவிடும் என எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே வட கொரியா அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை திறமையாக கையாண்டு வருகிறது, தற்போதைக்கு அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட தலைவர் என்றால் அது வட கொரிய தலைவர் மட்டும் தான்.
எங்களுடைய போரில் விரைவில் வட கொரியா தலையிடும் நாள் வரலாம், ஏனென்றால் வட கொரியா எங்களுடைய கூட்டணியில் உள்ளது.
Reuters
மேலும் ரஷ்யா, மற்றும் சீன அதிகாரிகள் ஹமாஸ் அமைப்புடன் தொடர்ந்து ஆலோசனையில் உள்ளனர். ஹமாஸ் அதிகாரிகள் மாஸ்கோவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
அடுத்த கட்டமாக ஹமாஸ் தூதுக்குழு சீனாவுக்கும் செல்ல உள்ளது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |