இனிமேல் வங்கிகள் 5 நாட்கள் மட்டுமே! விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு 5 நாட்கள் மட்டும் வேலை, இரண்டு நாள்கள் விடுமுறைக்கு நிதி அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது.
5 நாட்கள் மட்டுமே வேலை
இந்திய வங்கிகள் சங்கம் வங்கிகளுக்கு 5 நாட்கள் மட்டும் வேலை அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், வங்கிகளுக்கு சனி மற்றும் ஞாயிறுகளில் விடுமுறை விடுவது வலுப்பெற்றுள்ளது.
தற்போது, ஒரு மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் வேலை நாளாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு, நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிக்கப்படும்.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வங்கிகளுக்கு தினமும் 8 மணி நேரத்திற்கு பதில் 9 மணி நேரம் பணியை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலை நேரம் அதிகரிப்பு
இந்த முறையை அமல்படுத்த வேண்டும் என்ற வங்கி அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகமாவே உள்ளன.
கடந்த ஜூலை 28 ஆம் திகதி, வங்கிகளுக்கு 5 நாள்கள் மட்டுமே வேலை அளிப்பது தொடர்பான முன்மொழிவுக்கு இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது, நிதி அமைச்சகத்திற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு, அமைச்சகம் இறுதி முடிவை எடுக்கும்.
இதனிடையே, கடந்த மே மாத கூட்டத்தில் வங்கிகள் 5 நாட்கள் வேலை செய்வதற்கு பதிலாக, மொத்த வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
5 நாள் வேலை கோரிக்கை எப்போது வந்தது?
கடந்த மே 2021 ஆம் ஆண்டு, எல்ஐசி பாலிசி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு வங்கிகளுக்கு 5 நாள்கள் வேலை கோரிக்கை எழுந்தது.
பின்பு, இந்திய வங்கிகள் சங்க கூட்டத்தில் வங்கி ஊழியர்களின் மொத்த வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பண பரிவர்த்தனையுடன் ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது.
மேலும், பணமில்லா பரிவர்த்தனை அதிகரிக்கப்படும் 40 நிமிடங்களில் செய்யப்படும் என்றும் முன்மொழியப்பட்டது. வங்கிகளுக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை அளிக்கும் திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு மாதத்தில் உள்ள அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |