Home Loan: சொந்த வீடு கட்ட குறைந்த வட்டி! வங்கிகள் லிஸ்ட் இதோ
சொந்த வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் கடன் உதவிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர். அதனை, குறைந்த வட்டியில் எங்கு வாங்கலாம் என்பது குறித்து தான் பார்க்க போகிறோம்.
ஹோம் லோன்
சொந்த வீடு கட்டுவதற்கு வாங்கும் ஹோம் லோன் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட்டில் ஏற்படும் மாற்றத்தை வைத்து வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும்.
ரெப்போ விகிதம் என்பது இந்தியாவில் உள்ள வங்கிகள் RBI வங்கியிடம் இருந்து கடன் வாங்குவதற்கான வட்டி விகிதம் தான். இதற்கான வட்டி விகிதம் அதிகமாகும் போது லோன்களுக்கான வட்டியும் அதிகமாகும்.
* ஹெச்.டி.எப்.சி வங்கி ( HDFC Bank)
தனியார் வங்கியான இந்த வங்கியில் குறைந்த வட்டி விகிதத்தில் சொந்த வீட்டு கடன் வழங்கப்படுகிறது. அதாவது, வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.45 சதவீதம் முதல் 9.85 சதவீதம் வரை இருக்கிறது.
* இண்டஸ் இன்ட் வங்கி (IndusInd Bank)
இந்த வங்கியில் வழங்கப்படும் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதம் முதல் 9.7 சதவீதம் வரை இருக்கிறது. மேலும், இந்த வங்கி கடனை திருப்பி செலுத்த 30 வருடங்கள் வரை அவகாசம் வழங்குகிறது
* இந்தியன் வங்கி (Indian Bank)
இந்த வங்கியில் வழங்கப்படும் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.50 சதவீதம் முதல் 9.9 சதவீதம் வரை இருக்கிறது.
*பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab national Bank )
இந்த வங்கியில் வழங்கப்படும் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.6 சதவீதம் முதல் 9.45 சதவீதம் வரை இருக்கிறது. இந்த வங்கியில் 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
* பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank of maharashtra)
இந்த வங்கியில் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம்8.6 சதவீதம் முதல் 10.3 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.
மேலும், ஒருவருக்கு வழங்கப்படும் கடனானது அவர்களின் வருமானம் மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான திறனை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. கடன் வாங்கும் நபரின் கிரெடிட் ஸ்கோர், கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மற்றும் வட்டி விகிதத்தை பொறுத்து இது மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |