ஸ்மார்ட் ஃபோன்கள் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஓரே சார்ஜர் போர்ட்: இந்திய அரசு அதிரடி!
- இந்தியாவில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களில் பொதுவான சார்ஜர் போர்ட்.
- இந்திய அரசுடன் ஆகஸ்ட் 17ஆம் திகதி ஸ்மார்ட் போன் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள் சந்திப்பு.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுக்கொண்டது போல இந்தியாவிலும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்களில் ஒரே சார்ஜர் கொள்கையை பின்பற்றுமாறு அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் வரும் 2024 முதல் அனைத்து ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட அனைத்து சாதனங்களுக்கும் ஒரே சார்ஜரை ஏற்றுக்கொள்வதற்கான சட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
gizmochina
இந்த நிலையில் இந்தியாவிலும் பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவது, மின் கழிவுகளை தடுப்பது, நுகர்வோர்களின் மீதான சுமையை குறைப்பது போன்ற சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக ஸ்மார்ட் போன் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களை சந்திக்கும் கூட்டத்திற்கு இந்திய அரசு ஆகஸ்ட் 17ஆம் திகதி அழைத்துள்ளது.
இந்த கூட்டத்தில் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், இ-ரீடர்கள், இர்பட்டுகள், டிஜிட்டல் கேமராக்கள், ஹெட்போன்கள், ஹெட்செட்டுகள் மற்றும் கேபிள் வயர்கள் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய அனைத்து சாதனங்களுக்கும் யூ எஸ் பி டைப் சி( USB Type-C) போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனை ஏற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Shutterstock
இது குறித்து மூத்த நுகர்வோர் விவகார அமைச்சக அதிகாரி பி டி ஐ -யிடம்(PTI) தெரிவித்துள்ள தகவலில், நிறுவனங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்த சேவையை நிறைவேற்ற முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அதை செய்ய முடியாது என கேள்வி எழுப்பி உள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: அழிக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்: புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களால் வெளியான உண்மை
அத்துடன் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களில் பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்