அழிக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்: புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களால் வெளியான உண்மை
- சாக்கி விமானப்படை தளத்தில் தாக்குதலில் பல ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
- கிரிமியா விமானப்படை தளத்தின் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டது பிளானட் லேப்ஸ் நிறுவனம்
கிரிமியாவில் உள்ள சாக்கி விமானப்படை தளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது எட்டு ரஷ்ய போர் விமானங்கள் சேதமடைந்து இருப்பதாக தற்போது புதிதாக வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுக்கின்றன.
கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யாவால் கிரிமியா கைப்பற்றபட்டு இருந்தாலும், சர்வதேச அளவில் கிரிமியாவை உக்ரைனின் பகுதியாகவே சர்வதேச நாடுகள் அங்கீகரித்து வருகிறது.
கிரிமியாவை ரஷ்யாவின் பகுதியாக உக்ரைன் அங்கீரிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது இருநாடுகளுக்கு இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்.
PLANET LABS PBC
இந்தநிலையில் ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்ட கிரிமியாவின் மேற்கில் உள்ள சாக்கி விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பல ரஷ்ய போர் விமானங்கள் சேதமடைந்ததுடன், சில போர் விமானங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் பிளானட் லேப்ஸ் வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
இதுகுறித்து புதன்கிழமை உக்ரைன் தெரிவித்துள்ள கருத்தில், சாக்கி Saky விமானப்படை தளத்தில் செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒன்பது ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது, ஆனால் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததுடன் அருகிலுள்ள டஜன்க் கணக்கான வீடுகளை சேதப்படுத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
PLANET LABS PBC
மேலும் சேமிப்பு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விமான வெடிமருந்துகள் வெடித்தது என்பதை மட்டும் ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிளானட் லேப்ஸில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், எரிந்த பூமியின் பெரிய பகுதிகளையும், ராணுவ விமானங்களின் எரிந்த எச்சங்களுடன் ஓடுபாதையில் ஏற்பட்ட சேதத்தையும் காட்டுகின்றன.