மொத்த நோயாளிகளும் இறப்பு... கதறும் குடும்பத்தினர்: வெளியான பகீர் காணொளி
எகிப்தில் ஒரு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து கொரோனா பாதித்த நோயாளிகளும் இறந்ததாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எகிப்தின் ஆஷ் ஷர்கியா மாகாணத்தில் அமைந்துள்ள எல் ஹுசைனியா மத்திய மருத்துவமனையிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் அளவு 2 சதவீதத்திற்கும் குறைவாக சரிவடைந்த நிலையிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கில் உள்ள மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவங்களின் பகீர் காட்சிகளை நோயாளியின் உறவினர்களில் ஒருவர் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த காணொளியில், அனைவருமே இறந்து விட்டார்கள் என ஒருவர் அரேபிய மொழியில் அலறுவது பதிவாகியுள்ளது.
செவிலியர்கள் மட்டுமே மிஞ்சியுள்ளார்கள் என கதறும் அந்த குரல், கடவுள் மட்டுமே நம்மை காப்பாற்ற வேண்டும் என கூறுகிறது.
அந்த காணொளியில், நோயாளிகள் பலர் படுக்கையில் எவ்வித சலனமும் இன்றி படுத்திருக்க, செவிலியர்கள் பரபரப்பாக இயங்குவது பதிவாகியுள்ளது.
இதனிடையே, குறித்த காணொளி இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், பதிவு செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்தில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவமாகும் இது. முன்னர் கர்பியா மாகாணத்தில் உள்ள ஜெஃப்டா பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இதேபோல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மரண எண்ணிக்கை அதிகரித்தது.
பலர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அலட்சியமே இது போன்ற தொடர் நிகழ்வுகளுக்கு காரணம் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.