இனி முழு நேரமும் அரசியல் தான்.., கடைசி படத்தில் நடிக்காமல் போகிறாரா விஜய்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், அண்மையில் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, நடிகர் விஜய் கட்சியின் அரசியல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முழு நேர அரசியல்
மேலும், விஜய் தனது 68 -வது படமான கோட் படத்தில் நடித்துவிட்டு 69 -வது படத்தையும் முடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
விஜயின் 69 -வது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், நடிகர் விஜய் அந்த படத்தை கைவிடுவதாக கூறப்படுகிறது.
அதாவது அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026 -ம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், விஜய் அடுத்த படத்தில் நடித்தால் அது முடிய ஒரு வருடம் ஆகிவிடும். இதனால், அரசியல் பணிகளை தொடங்குவதற்கு தாமதம் ஆகும்.
அதனால், இப்போது இருந்தே சுற்றுப்பயணம், மாநாடு, மாவட்டம் தோறும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தினால் தான் தேர்தலை வலிமையாக சந்திக்க முடியும் என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறுவதாக பேசப்படுகிறது.
இந்த காரணத்தினால் தான் நடிகர் விஜய் தன்னுடைய 69 -வது படத்தில் நடிக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |