வாய் துர்நாற்றமா? எளிய முறையில் போக்க இதை செய்தாலே போதும்
பொதுவாக பலரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் வாய் துர்நாற்றம்.
சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
உணவைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும். அப்போது, வாயில் இயற்கையாகவே வசித்துக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், இந்த உணவுப் பொருள்களுடன் வினை புரியும்.
இதனால், உணவுத் துகள்கள் அழுகும். அப்போது கந்தகம் எனும் வேதிப்பொருள் உருவாகும். இது கெட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய் நாற்றத்துக்கு அடிப்படைக் காரணம்.
இது வரமால் தடுக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பல் விளக்கியபின் சமையல் சோடா 1 ஸ்பூன் எடுத்து அரை கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து கொப்பளியுங்கள். பல் இடுக்களிலும் நீர் செல்லும்படி சுமார் 1 நிமிடம் வரை கொப்பளியுங்கள். சமையல் சோடா துர் நாற்றத்தை உண்டுபண்ணும் பேக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் சில நொடிகளில் உங்கள் வாய் துர் நாற்றம் காணாமல் போகும்.
- நாக்கை மறக்காமல் தினமும் காலை எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்கப் போகும் முன் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் பற்களைப் போல இருமடங்கு அழுக்குகளும் கிருமிகளும் உங்கள் நாக்கின் துவாரங்களில் இருக்கும். அவைகளால் துர் நாற்றம் உண்டாகும்.
- தூங்குவதற்கு முன் பால் குடிக்கும் வழக்கம் இருப்பவர்கள் குடித்தவுன் வாய் கொப்பளிக்க மறக்காதீர்கள். பால் வாயில் பற்சிதைவு உண்டாக முக்கிய காரணமாகும்.
- பற்களில் சிதைவு, சொத்தை இருந்தால் வாயில் துர் நாற்றம் உண்டாகும். அவாறு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
- அடிக்கடி நீர் குடித்தால் கிருமிகள் பற்களில் தங்காது. அடித்துச் சென்றுவிடும். ஆகவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை நீர் குடியுங்கள். இதனால் உங்கள் வாயில் துர் நாற்றம் உண்டாகாது.
- காரம் சாப்பிடுபவர்களுக்கு வாயில் துர் நாற்றம் உண்டாகாது. காரணம் அவர்களுக்கு வாயில் அதிக எச்சில் சுரக்கும். எச்சிலில் இருக்கும் என்சைம் கிருமி நாசினி. பேக்டீரியாக்களை அழித்துவிடும். ஆகவே காரமான உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்.