சட்டசபை தேர்தலில் அதிமுக-வுடன் தவெக கூட்டணியா?.., உறுதியாக இருக்கும் விஜய்
சட்டசபை தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி குறித்து விஜய் எடுத்திருக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
தேர்தல் பிரசாரம், வியூகம், பூத் கமிட்டி, வாக்காளர்கள் சேர்ப்பு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகியுள்ளது .
இதனிடையே சட்டசபை தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி தொடர்பாக விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் விஜய் திட்டவட்டமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அதிமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலை தவெக-வினர் மறுத்து உள்ளனர்.
2026-ல் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |