நீட் தேர்வு கொண்டு வந்தவர்களுடன் கூட்டணி.., இப்போது ரத்து செய்ய வலியுறுத்தல்: சரத்குமார் ஆவேசம்

Sarathkumar NEET
By Sathya Jul 27, 2024 07:52 AM GMT
Report

மத்தியில் நீட் தேர்வை கொண்டு வர காரணமாக இருந்தவர்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டு ரத்து செய்ய வலியுறுத்துகிறார்கள் என்று சரத்குமார் விமர்சித்துள்ளார்.

சரத்குமார் ஆவேசம்

பாஜக பிரமுகரும், நடிகருமான சரத்குமார் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுவது, மருத்துவப்படிப்பில் நீட் பொதுத்தேர்வின் முக்கியத்துவத்தை புறக்கணிப்பதுடன், திறமையான, தரம்வாய்ந்த மருத்துவர்கள் உருவாக்கத்தை தவிர்ப்பதாக உள்ளது.

2010 - இல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு, மத்திய, மாநில அரசுகளின் பாடத்திட்ட வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் விலக்கு கோரியது நியாயமானதாக இருப்பினும், இன்றைய காலக்கட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் அனைத்துப் போட்டி தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்தில் மாநில பாடத்திட்டத்திங்கள், மத்திய பாடத்திட்டங்களுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு கொண்டு வந்தவர்களுடன் கூட்டணி.., இப்போது ரத்து செய்ய வலியுறுத்தல்: சரத்குமார் ஆவேசம் | Alliance With Those Brought Neet Exam Sarathkumar

இனியும் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது என்பது, தனியார் மருத்துவக்கல்லூரிகளின் வியாபார நோக்கத்திற்காக, செய்யும் அரசியல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2010 ல் மத்தியில் நீட் தேர்வை கொண்டு வர காரணமாக இருந்தவர்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, தற்போது அதனை ரத்து செய்ய வலியுறுத்துகிறார்கள். ஆண்டுதோறும் நீட் தேர்வு வரும் சமயத்தில் கண்துடைப்பு அரசியல் நாடகங்களாக இது போன்று தீர்மானங்கள் நிறைவேற்றுகிறார்கள்.

பயிற்சி மையம் செல்லாமலேயே UPSC தேர்வில் வெற்றி.., யார் இந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி?

பயிற்சி மையம் செல்லாமலேயே UPSC தேர்வில் வெற்றி.., யார் இந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி?

உண்மையில், தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் ஆண்டுதோறும் முன்னேற்றம் காண்கிறார்கள். உதாரணத்திற்கு 2018 இல் 39.56% ஆகவும், 2019 இல் 48.5% ஆகவும், 2020 இல் 57.44% ஆகவும் வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.

மேலும், போட்டித்தேர்வு எனும் போது, தற்போது 15 லட்சம் மாணவர்கள் எழுதும் தேர்வானது அடுத்த சில வருடங்களில் இரண்டு, மூன்று மடங்கு அதிகரிக்கச் செய்யுமே தவிர, குறைய வாய்ப்பில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

TANCET (Tamilnadu Common Entrance Test), TNTET, SLET (State Level Eligibility Test), TNUSRB (Tamilnadu Uniformed Services Recruitment Board) நடத்தும் தேர்வுகள் உட்பட பல பொது நுழைவுத் தேர்வுகளை நடத்தி ஆசிரியர், காவலர், பொறியாளர் என தொழில்முறை கல்வியாளர்களை குறிப்பிட்டு தேர்வு செய்து உருவாக்கும் தமிழ்நாடு அரசு, சிறந்த மருத்துவரை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை மட்டும் வேண்டாமென புறக்கணிப்பதன் பின்னணி என்ன?

நீட் பொதுத்தேர்வு வேண்டாமென்றால் பிற துறைகளில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளையும் மாநில அரசு புறக்கணிக்குமா? தனியார் துறைகளில் சாதாரண பணிகளில் நியமனம் செய்வதற்கு கூட, அடிப்படை கல்வித்தகுதியுடன் பல சுற்றுகள் தேர்வு வைத்து திறமையை நிரூபிப்பவர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள்.

அப்படி இருக்கையில் வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மற்றும் நோய்த்தாக்கத்தை சவாலுடன் எதிர்கொள்ள வேண்டிய உயிர்காக்கும் மருத்துவர்களை உருவாக்குவதற்கு பொதுத்தேர்வு அவசியம் என தமிழக அரசும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து ஆட்சி செய்யும் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்களும் உணர வேண்டும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது.

அதுபோன்று, தரமான கல்வி, தரமான மருத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுத்தேர்வை எதிர்கொள்ள நம் மாணவர்களை தயார்படுத்துவதே சாலச்சிறந்தது என கருதுகிறேன்" என்று கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US