முதலை வாயில் சிக்கிய நாய்…காப்பாற்ற முயன்ற 85 வயது மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவின் புளோரிடாவில் முதலை தாக்கி 85 வயது மூதாட்டி உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியை தாக்கிய முதலை
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 85 வயது மூதாட்டி ஒருவர் தனது நாயை நடைபயிற்சிக்கு அழைத்து சென்று இருந்த போது முதலை ஒன்று தாக்கியதில் உயிரிழந்தாக NBC தெரிவித்துள்ளது.
புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் (FWC) செய்தி தொடர்பாளர் Arielle Callender CNNயிடம் வழங்கிய தகவலில், இந்த தாக்குதல் சம்பவத்தின் போது மூதாட்டி நாயுடன் இருந்ததாகவும், அதில் நாய் உயிர் பிழைத்துள்ளது, இருப்பினும் அதன் நிலை தற்போது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள ஊடக அறிக்கையின் படி, மூதாட்டி தனது நாயுடன் ஓய்வூதிய சமூகத்தின் (retirement community) குளம் அருகில் சென்று கொண்டு இருந்த போது, முதலை ஒன்று நாயை தாக்கியுள்ளது, அந்தப் பெண் நாயைக் காப்பாற்ற முயன்றார், ஆனால் அந்த முயற்சியில் தனது உயிரை இழந்தார் என தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட உடல்
செயின்ட் லூசி கவுண்டி ஷெரிஃப் கென் மஸ்காரா பேசிய போது, முதலை 11 அடிக்கு அருகில் இருக்கும் என்று மதிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது மற்றும் சம்பந்தப்பட்ட முதலை ஒப்பந்தம் செய்யப்பட்ட தொல்லை முதலை பொறியாளரால் பிடிக்கப்பட்டது.
AFP
இதற்கிடையில் FWC அறிக்கையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த அனுதாபங்களும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர்.