AI மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு.., 2025 பட்ஜெட் அறிவிப்பில் முக்கிய அம்சங்கள்
நாடாளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிலையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட் அறிவிப்பில் முக்கிய அம்சங்கள்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர், தனது 8-வது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
* சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இந்திய அஞ்சல்துறையை மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்.
* அசாம் மாநிலத்தில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்.
* விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
* பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
* பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடனாக ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப்படும்.
* ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்படும்.
* பீகாரில் புதிய விமான நிலையம் அமைக்கபடும். அதேபோல, பாட்னா விமான நிலையம் விரிவு செய்யப்படும் * முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |