அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு? நடிப்பைத் தவிர 7 வழிகளில் வருமானம்
புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன், நடிப்பு மட்டுமின்றி பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் வருமானம் ஈட்டுவதற்கான வழியை உருவாக்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் முன்னணி கதாநாயகன் ஆவார்.
இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல்வேறு முயற்சிகளில் முதலீடு செய்து வருகிறார்.
42 வயதான அர்ஜுன் தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் ஆவார். தகவல்களின்படி அவரது சொத்து மதிப்பு ரூ.460 கோடி என கூறப்படுகிறது.
புஷ்பா-1 படத்திற்கு 45 கோடியும், புஷ்பா 2 படத்திற்கு 85 கோடியும் சம்பளம் வாங்கும் நடிகரின் சொத்து மதிப்பு இன்னும் அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
தனி விமானம், ஆடம்பரமான பங்களா, பல சொத்துக்கள், சொகுசு கார்கள் மற்றும் பலவற்றுடன் ஆடம்பர வாழ்க்கை வாழும் நடிகர் அல்லு அரஜூனின் வருமான ஆதாரங்கள் என்னவென்று பார்ப்போம்.
1. தயாரிப்பு நிறுவனம் (Production House)
2022-இல், அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் அல்லு ஸ்டுடியோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் திறந்து தனது தாத்தா அல்லு ராமலிங்கய்யாவுக்கு அர்ப்பணித்தார்.
இந்த ஸ்டுடியோ 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது மற்றும் திரைப்படத் தயாரிப்பு, வணிக தயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
அல்லு ஸ்டுடியோவுடன், அல்லு குடும்பம் கீதா ஆர்ட்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தையும் வைத்திருக்கிறது.
2. மல்டிபிளக்ஸ் (Multiplex)
அல்லு அர்ஜுன் ஜூன் 2023-இல் ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் தனது சொந்த மல்டிபிளெக்ஸைத் தொடங்கி தனது வணிகத் துறையை விரிவுபடுத்தினார்.
பல்வேறு ஓன்லைன் அறிக்கைகளின்படி, அல்லு அர்ஜுன் தனது மல்டிபிளக்ஸ் வணிகத்தை மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.
3. ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான உணவகம் (Restaurant)
ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் உள்ள பிரபல அமெரிக்க விளையாட்டு பார் மற்றும் உணவகச் சங்கிலியான பஃபேலோ வைல்ட் விங்ஸின் (Buffalo Wild Wings) உரிமையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் வைத்திருக்கிறார்.
4. சமூக ஊடக இடுகைகள் (Social media posts)
சமூக ஊடகங்களில் (Instagram-ல் 25 million) பெரும் பின்தொடர்பவர்களைக் கொண்ட 42 வயதான நடிகர், ஓன்லைனில் ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும் கணிசமான தொகையை வசூலிக்கிறார்.
5. பிராண்ட் ஒப்புதல்கள் (Brand endorsements)
அல்லு அர்ஜுன் KFC, Frooti, Rapido, Hero MotoCorp, RedBus, Hotstar மற்றும் பல பிரபலமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகளுடன் தொடர்புடையவர். ஒவ்வொரு பிராண்டையும் விளம்பரப்படுத்த தெலுங்கு நடிகர் சுமார் ரூ.4 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.
6. OTT platform (Aaha)
நவம்பர் 2020-இல், அல்லு அர்ஜுன் ஆஹாவின் (Aaha) brand ambassador ஆனார். இது தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளடக்கத்தை வழங்கும் ஸ்ட்ரீமிங் தளமாகும். இந்த OTT தளத்தை அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் நிறுவினார்.
7. ஸ்டார்ட்அப்களில் முதலீடு
இது ஓன்லைன் மருத்துவ ஆலோசனைகள், நர்சிங் கேர், நோயறிதல் சோதனைகள், மருந்து விநியோகம் மற்றும் பிற சுகாதார தீர்வுகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் ஒரு healthcare startup நிறுவனமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Allu Arjun Net Worth, Pushpa actor Salary, Allu Arjun Income Sources