உலகிலேயே அதிக வயதானவர்., 124 வயதைக் கடந்தவரின் ஆரோக்கிய ரகசியம் இதுதான்
பெரு நாட்டைச் சேர்ந்த 124 வயதான மார்சிலோனா அபாத் (Marcelino Abad) உலகின் வயதான நபர் என்று நம்பப்படுகிறது.
அபாத் 1900-இல் ஹுவான்கோ (Huanuco) பகுதியில் பிறந்ததாக கூறப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், அமைதியையும் கடைப்பிடிப்பதே அபாத்தின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்கிறார்கள்.
ஹுவான்கா பகுதியின் பசுமை மற்றும் வனவிலங்குகளுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்ந்ததால் அபாத்தின் உடல் நலம் தேறியதாக பெருவியன் அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
12 தசாப்தங்களுக்கும் மேலான வாழ்க்கையின் மைல்கல்லை கடந்துள்ள அபாத், ஏப்ரல் 5-ஆம் திகதி தனது 124 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இது, கின்னஸ் உலக சாதனையில் அபாத்தின் பெயரை உலகின் வயதான நபராக பதிவு செய்ய உதவிதாக பெருவியன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாக்லாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்த அபாத் ஒரு நூற்றாண்டை எட்டியவர். ஆனால் 2019-இல் தான் பெருவியன் அரசாங்கம் அவரை அங்கீகரித்து அரசாங்க அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியத்தை வழங்கியது.
பழங்கள் மற்றும் ஆட்டிறைச்சியை உட்கொள்வதால் தான் தனது சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் இருப்பதாக அபாத் கூறுகிறார்.
முதியோர் நல இல்லத்தில் தங்கியுள்ள அபாத் அங்கு தனது 124வது பிறந்தநாளை கொண்டாடினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |