தினமும் தவறாமல் கற்றாழை ஜூஸ் குடிங்கள்: இந்த பிரச்சனைகள் எல்லாம் குணமாகும்
கற்றாழை நம் குடலில் உள்ள 'நல்ல' பாக்டீரியாவை பராமரிக்க ஒரு ப்ரீபயாடிக்காக செயல்படுகின்றன.
கற்றாழையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. இந்நிலையில் கற்றாழை சாறை குடிப்பதால், உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
இதில் பாலிபினால்ஸ் அதிகமாக உள்ளது. இவை ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது.
feelgoodpal
மேலும் இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளது இது நமது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
தொடர்ந்து நாம் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தீவிரமான நோய் ஏற்படாது.
இது ஒரு குறைந்த கலோரிகளை கொண்ட ஜூஸ் என்பதால் உடல் எடையை குறைக்க உதவும். உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தி, உடலில் உள்ள நச்சு தன்மைகளை நீக்கி, கொழுப்பை குறைக்க உதவும்.
சர்க்கரை நோயாளிகள் இதை குடித்தால் சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் இதில் உள்ள பொருட்கள், இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும். ஆனால் சுகர் பேஷண்ட்ஸ் இதை சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.
இதில் உள்ள என்சைம் நமது உணவை உடைக்க உதவும். மேலும் உடல் அதிக சத்துகளை எடுத்துக்கொள்ள உதவுகிறது.
மேலும் இது மலச்சிக்கல், அஜீரணம், வயிறு உப்புதலை குணமாக்கும். இதில் கால்சியம், மெக்னீஷியம், பொட்டாஷியம், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் பி காம்பிளக்ஸ் உள்ளது.
New Africa/Shutterstock
இந்த சத்துகள் கண் பார்வை திறனை அதிகரிக்கும். கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் பார்த்துகொள்ளும். வரண்ட கண்களை ஏற்படாமல் தடுக்கும்.
கற்றாழை சாறை நமது பல்களின் ஈறுகளில்படும்படி செய்தால், ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும். இது புத்துணர்வான ஸ்வாசத்தை கொடுக்கும்.
இது வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய தூண்டும். இதனால் நமது உடலை பாதிக்கும் தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
செய்முறை
கற்றாழை இலையை நன்றாக கழுவ வேண்டும்.
அதை 2 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.
தொடர்ந்து அதில் கற்றாழையில் உள்ள ஜெல்லை வெளியே எடுத்து, அதை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்துகொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |