விஜயகாந்தை அடுத்த ஸ்டாலின் அல்லது உதயநிதி., பிரேமம் பட இயக்குநர் சர்ச்சை பதிவு
புகழ்பெற்ற நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதனிடையே, பிரேமம், நேரம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், விஜய்காந்த் மரணம் குறித்து தனது Instagram Storyயில் ஒரு பதிவை வெளியிட்டார். இப்போது அந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது பதிவில், "உதயநிதி அண்ணா இது உங்களுக்கு தான். நான் கேரளாவில் இருந்து வந்து, RedGiant அலுவலகத்தில் அமர்ந்து, உங்களை அரசியலில் இறங்க சொன்னேன்.
கலைஞரை கொன்றது யார், இரும்பு பெண்மணி ஜெயலலிதாவை கொன்றது யார் என்று உங்களை கண்டுபிடிக்க சொன்னேன்.
இப்போது நீங்கள் விஜயகாந்தை கொன்றது யார் என்பதையும் கண்டுபிடிக்கவேண்டும். இதை நீங்கள் செய்யாவிட்டால், அவர்கள் ஏற்கெனவே ஸ்டாலின் ஐயாவையும், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் சாரையும் கொள்ள முயற்சி செய்துள்ளனர்.
நீங்கள் மட்டும் கொலைகாரர்களை தேடி கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த கொலைகாரனின் அடுத்த குறி நீங்கள் அல்லது ஸ்டாலின் சாராக தான் இருப்பீர்கள்.
நேரம் திரைப்படம் பாரிய ஹிட் ஆனபோது நீங்கள் எனக்கு பரிசு கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கும். iPhone Centreக்கு Call செய்து அடுத்த 15 நிமிடங்களில் எனக்கு கறுப்பு iPhoneஐ வரவழைத்து எனக்கு கொடுத்தீர்கள். உங்களுக்கு அது நினைவிருக்கும் என நான் நம்புகிறேன்.
இதை விட எளிதானது, இந்த கொலைகாரர்களையும் அவர்களது நோக்கத்தையும் கண்டுபிடிப்பது.@udhay_stalin" என்று பதிவிட்டுள்ளார்.
அல்போன்ஸ் புத்ரன், யாரை கொலைகாரர்கள் என்று சொல்கிறார், அவர்கள் அடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினையும், அமைச்சகர் உதயநிதியையும் குறிவைப்பார்கள் என்று ஏன் கூறுகிறார் என்று பலருக்கும் புரியவில்லை என அவரது ரசிகர்களும் இணையதளவாசிகளும் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் அவரது இந்த வித்தியாசமான பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Captain Vijayakanth, DMDK Chief Vijayakanth, Alphonse Puthren Vijayakanth, Alphonse Puthren Udhayanithi Stalin, MK Stalin, Chief Minister MK Stalin, Kalaignar Karunanidhi, iron lady Jayalalitha