சொந்த வீடு முதல் சொகுசு கப்பல் வரை.., சீரியல் நடிகை ஆலியா மானசாவின் சொத்துமதிப்பு எவ்வளவு?
சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கவர்ந்த நடிகையாக ஆல்யா மானசா வலம் வருகிறார்.
விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியலில் அறிமுகமான ஆலியா மனசா தனது ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கின்ற ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் அண்மையில் பிரம்மாண்டமான புதுவீடு கட்டி குடியேறினார்கள்.
ஒரு பேட்டியில் ஆலியா மானசா எங்களின் கனவு வீடு, சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், தற்போது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 50,000 முதல் 60,000 வரை சம்பளம் வாங்குவதாக ஆலியா மானசா கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகை ஆல்யா மானசா 2 கோடி ரூபாய்க்கு போட் ஹவுஸ் ஒன்றையே சொந்தமாக சமீபத்தில் வாங்கியுள்ளார்.
இந்த போட் ஹவுஸில் ஒரு ரூமின் ஒரு நாள் வாடகையே ஒரு குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மேல் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று புதிதாக கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரை ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர் குழந்தைகளுடன் சென்று வாங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமிலும் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சமீபத்தில் சொந்தமாக 1.8 கோடி ரூபாயில் வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்திய ஆல்யா மானசா 2 கோடி மதிப்பிலான போட் ஹவுஸ், 90 லட்சத்துக்கு சொகுசு பென்ஸ் கார் என அடுத்தடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்.
இந்நிலையில், அவருடைய சொத்து மதிப்பு சுமார் 10 கோடி வரை இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |