அங்கு கனவை நிறைவேற்ற முடியவில்லை.. பவன் கல்யாண் கட்சியில் இணைய போகிறாரா அம்பத்தி ராயுடு?
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு நடிகர் பவன் கல்யாணை சந்தித்துள்ளார்.
கடந்த 28ம் திகதி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அம்பத்தி ராயுடு, 9 நாள்களிலே அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், நடிகர் பவன் கல்யானை சந்தித்த அம்பத்தி ராயுடு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தனது அரசியல் பயணத்தை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவு..
முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தனது பதிவில், "தூய்மையான நோக்கத்துடனும், இதயத்துடனும் ஆந்திர மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் YSRCP இல் சேர்ந்து எதிர்பார்த்தபடி மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைத்தேன்.
நான் களத்தில் நின்று பல கிராமங்களுக்குச் சென்றேன். பல மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தனிப்பட்ட முறையில் அவற்றைத் தீர்க்க என்னால் இயன்றதைச் செய்தேன்.
சில காரணங்களால், YSRCP -யுடன் கட்சியுடன் எனது கனவை நிறைவேற்ற முடியவில்லை என்று உணர்ந்தேன். எனது சித்தாந்தமும் YSRCP -யின் சித்தாந்தங்களும் ஒத்துப்போகவில்லை, இதனால் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்” என்றார்.
மேலும், "எனது நலம் விரும்பிகள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பவன் கல்யாணின் ‘ஜன சேனா’ கட்சியில் இணைய அறிவுறுத்தினார்கள். அவரின் சித்தாந்தங்களைப் புரிந்துகொள்வதற்காக ஒருமுறை அவரைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அதனால்தான், நான் பவன் கல்யானை சந்தித்து வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றி விவாதித்து அவரைப் புரிந்து கொள்வதில் நிறைய நேரம் செலவிட்டேன். அவருடைய சித்தாந்தமும் என்னுடையதைப் போலவே இருக்கிறது. அவரைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இப்போது எனது கிரிக்கெட்டுக்காக துபாய்க்கு புறப்படுகிறேன். அரசியலில் இணைகிறேனா என்று அப்புறம் கூறுகிறேன். ஆந்திர மக்களுக்காக நான் எப்போதும் இருப்பேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |