இந்திய வீராங்கனை வீட்டில் நேர்ந்த சோகம் - கோப்பை வெல்லும் வரை மறைத்த குடும்பத்தினர்
இந்திய வீராங்கனை வீட்டில் நேர்ந்த சோகத்தை, கோப்பை வெல்லும் வரை அவரது குடும்பத்தினர் மறைத்துள்ளனர்.
அமன்ஜோத் கவுர்
இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி, முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி முதல் ரசிகர்கள் வரை வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீராங்கனை ஒருவரின் வீட்டில் நடைபெற்றுள்ள சோக நிகழ்வு தற்போது தெரிய வந்துள்ளது.

இறுதிப்போட்டியின் 42வது ஓவரில், தென் ஆப்பிரிக்க அணித்தலைவி லாரா சிக்ஸர் அடிக்க முயன்ற போது, இந்திய வீராங்கனை அமன்ஜோத் கவுர்(Amanjot Kaur) அதனை ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
பாட்டிக்கு மாரடைப்பு
அமன்ஜோத் கவுர் கிரிக்கெட்டில் சாதிக்க அவரது பாட்டி பக்வந்தி முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
அவர் சிறு வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று அவருக்கு பாதுகாப்பாக அவர் பாட்டி இருந்துவந்துள்ளார்.

அமன்ஜோத் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுக்க வேண்டும் என அவரது பாட்டி விரும்பியுள்ளார்.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் போது அவரது பாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 25 நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்துள்ளனர்.
ஆனால், இது தெரிந்தால் அமன்ஜோத்தின் விளையாட்டு திறன் பாதிக்கப்படும் என கருதிய அவரது குடும்பத்தினர் கோப்பையை வெல்லும் வரை இந்த நிகழ்வை அவரிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |