கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன்

Tamil nadu Egypt Tamil
By Karthikraja Feb 16, 2026 07:30 PM GMT
Report

தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகள் குறித்து திருவள்ளூரில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் முன்னாள் இந்திய தொல்லியல்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியுள்ளார்.

எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்

இதில் பேசிய அவர், "இரு வெளிநாட்டு ஆய்வாளர்கள் எகிப்தின் ராஜ பள்ளத்தாக்கில் 30 இடங்களில் தமிழி எழுத்து இருந்ததை கண்டறிந்துள்ளனர். 

கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன் | Amarnath Ramakrishnan About Tamil In Egypt

குறிப்பாக எகிப்தில் கண்டறியப்பட்ட சிகை கொற்றன் என்ற பெயர் கரூரில் உள்ள புகலூர் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது.

இதன் மூலம், தமிழ்நாட்டில் இருந்து எகிப்திற்கு வணிக தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்திற்கு வணிகம் செய்ய சென்ற தமிழர்கள் அங்கு தங்கள் பெயரை பதித்துள்ளனர்.

சிலர் சிகை என்பது சமஸ்கிருதம் என்கிறார்கள். சமஸ்கிருதம் என்பது உருவாக்கப்பட்ட மொழி, அது யாருக்கும் தாய்மொழியாக இருக்காது. 

கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன் | Amarnath Ramakrishnan About Tamil In Egypt

ஏனென்றால் ஒரு பெண் பேச முடியாத மொழி நிச்சயமாக தாய்மொழியாக இருப்பது சாத்தியமே கிடையாது. மொழி என்பது பெண்ணிடம் இருந்துதான் தோன்றும். 

இந்தியாவின் முதல் சாதியற்ற கிராமம்; வரதட்சணை வாங்க தடை - எங்கே தெரியுமா?

இந்தியாவின் முதல் சாதியற்ற கிராமம்; வரதட்சணை வாங்க தடை - எங்கே தெரியுமா?

சமஸ்கிருதம் என்பது மதச் சடங்கு மொழி, கடவுளைப் போற்றுவதற்காக தொகுக்கப்பட்ட மொழி. அது ஆணுக்கும் ஆணுக்கும் இடையே மட்டும்தான் பயன்படும்.

இரும்பை கண்டுபிடித்த தமிழன்

இன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது. தென்காசியில் உள்ள சிவகளை அகழாய்வில் 8 அடி நீளமுள்ள இரும்பு வேலை கண்டறிந்துள்ளோம். உலகில் முதல் முதலில் நாம் தான் இரும்பு வேலை கண்டறிந்துள்ளோம்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி என்பதை தமிழர்கள் மட்டும் தான் சொல்வோம். இவர்கள் என்ன வாளோடு பிறந்தார்களா என சிலர் கேட்பார்கள். இரும்பை கண்டுபிடித்தது தமிழன் தான் என்பது உறுதியாகியுள்ள போது அதனை எப்படி மறக்க முடியும்?

இரும்பு சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் என்ற பகுதியில் தான் கண்டறியப்பட்டது. அந்த தொழில்நுட்பம் அங்கிருந்து தான பரவியது என சொன்னார்கள். அந்த செய்தியை தமிழ்நாட்டில் செய்யப்பட்ட அகழாய்வுகள் மறுத்தன என்பதை நாம் உறுதியாக சொல்ல வேண்டும்.

சிவகளை அகழாய்வு கிமு 3300 என்று நிறுவியுள்ளது. இன்றிலிருந்து 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பை நாம் கண்டுபிடித்துள்ளோம், இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம் என்ற செய்தியை உலகிற்கு பறைசாற்றுகிறோம்" என பேசினார்.

மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US