தினமும் 2 வேப்பிலை மென்று சாப்பிடுங்க! இந்த நோய்கள் எல்லாம் பறந்து ஓடிவிடுமாம்
Allergy
Back Pain
Eye Problems
Dental Problem
Skin Care
By Kishanthini
பொதுவாக அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை மருத்துவ துறையில் வேப்பிலையின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வேம்பில் ஆன்டி பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.
வேப்பிலை நமக்கு எண்ணிலடங்காத நன்மைகளை தருகிறது இதன் பட்டை, இலை, வேப்பங்கொட்டை என்பது தாண்டி இதன் பூக்களும் பிரபலமானவை.
இது பல நோய்களுக்கு உதவியாக இருக்கின்றது. அந்தவகையில் இதனை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
- உங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் ஃப்ரீ ரேடிக்கல்கள் மாசுக்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை நீக்குகிறது. இதையொட்டி இது செல்லுலர் மட்டத்தில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
- உங்கள் குடல், மூட்டுகள் மற்றும் முதுகெலும்பு எப்போதும் ஆற்றலுடன் இருக்கும். இளமையாக வைத்திருக்க செய்யும்.
- பாக்டீரியா வைரஸ்கள், பூஞ்சை போன்ற அனைத்து நோயை உண்டாக்கும் கிருமிகளையும் எதிர்த்து போராடுகிறது.
- உடலில் இருக்கும் நச்சுக்களையும் நீக்கும்.காய்ச்சல், மலேரியா போன்ற தொல்லை தரும் நோய்களில் இருந்து உங்களது மீட்சியை துரிதப்படுத்தும்.
- இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் மூலக்கூறுகளை அகற்றி அவை அதிகரிப்பதை தடுக்கும். இதனால் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும்.
- வேப்பம்பூ மென்று சாப்பிடுவதால் அவை வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் வெளியேற்றப்படும்.
- சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய். தூசு மற்றும் கிருமிகளை நீக்கி பருக்கள் இல்லாமல் சருமத்தை சுத்தமாக வைத்திருக்கும்.
- பற்களில் இருக்கும் கறைகள் போக மஞ்சள் கறைகள்நீங்க வேப்பிலையை பொடியாக்கி பற்களில் தேய்க்கலாம். இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் ஈறுகளை வலுப்படுத்த உதவுகிறது.
- உங்கள் பார்வையை மேம்படுத்த பார்வை நரம்புகளில் எரிச்சல், சோர்வு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
- பளபளப்பான முடிக்கு வேப்ப இலைகள் பயன்படுத்தும் போது அது பொடுகு நீக்கும். இது உச்சந்தலையை மீண்டும் நீரேற்றம் செய்யும்.
- வேப்பம்பூ பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். குழந்தைகளுக்கு ரசத்தில் கலந்து கொடுக்கலாம். வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்க்கலாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US