தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டு பாருங்க... இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்!
பொதுவாக நம் உணவுப் பழக்க வழக்கங்களில் தயிருக்கென்று ஒரு முக்கிய இடம் உண்டு.
நம் உணவு முறையில் சாம்பார், ரசம் இவைகளை உண்டபின் கடைசியாக தயிர் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.
இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் ஜீரணமாக வேண்டும் என்பதற்காகத்தான்.
அதுமட்டுமின்றி தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது. அதிலும் உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது குடலுக்கு இன்னும் நல்ல பலனை தருகின்றது.
ஏனெனில் உலர் திராட்சையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து ப்ரீபயோடிக் போன்றும் செயல்படுகிறது.
அந்தவயைில் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்பதைக் காண்போம்.
- தயிருடன் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தில் இடையூறை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.
- தயிருடன் உலர் திலாட்சையை சேர்த்து சாப்பிடும் போது, அது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி, உள்ளுறுப்புக்களை சீராக செயல்பட வைக்கும்.
- உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது, குடலில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவிபுரியும்.
- குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது வாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மதியம் உணவு உண்ட பின் தயிரில் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்கள்.
- உலர் திராட்சை மற்றும் தயிர் இரண்டிலுமே கால்சியம் அதிகளவில் உள்ளது. இந்த ஊட்டச்சத்து எலும்புகளை வலுவாக்கவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவி புரியும்.
எப்படி சாப்பிடலாம்?
ஒரு பௌல் வெதுவெதுப்பான பாலில் 4-5 உலர் திராட்சையைப் போட்டு, அதில் அரை டீபூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து குறைந்தது 8-12 மணிநேரம் ஊற வைக்கவும். அதன்பின் இதை சாப்பிடவும்.