Amazon Prime Air சேவை: வீட்டின் நீச்சல் குளத்தில் விழுந்த பார்சல்! வைரல் வீடியோ
Amazon Drone Delivers Package Dropped into the Pool: அமேசானில் ஆர்டர் செய்யப்பட்ட பார்சல் ஒன்று ட்ரோன் மூலம் டெலிவரி செய்யப்பட இருந்த நிலையில், அந்த பார்சல் வீட்டின் நீச்சல் குளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீச்சல் குளத்தில் விழுந்த பார்சல்
அமெரிக்காவில் லிண்ட்சே ஆஸ்டன் என்ற பெண் அமேசான் பிரைம் ஏர் சேவை(Amazon Prime Air) மூலம் ஆர்டர் ஒன்றை செய்துள்ளார்.
இதையடுத்து அந்த பார்சல் ட்ரோன் மூலமாக தன்னுடைய வீட்டிற்கு வரவிருப்பதாக குறுஞ்செய்தி வந்ததை அடுத்து, நவீன முறை ட்ரோன் டெலிவரியை பார்ப்பதற்காக லிண்ட்சே ஆஸ்டன்(Lindsey Austen) தன்னுடைய வீட்டின் வாசலுக்கு வந்துள்ளார்.

ட்ரோன் பார்சலுடன் நெருங்கி வருவதை பார்த்துக் கொண்டு இருந்த லிண்ட்சே-வுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக வீட்டின் நீச்சல் குளத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த நிலையிலேயே பார்சலை கீழே நழுவ விட்டது.
இந்த எதிர்பாராத சம்பவத்தை தொடர்ந்து இனி தான் எப்போதும் வான்வழி டெலிவரி சேவையை பயன்படுத்த போவதில்லை என்று நியூயார்க் போஸ்ட் நாளிதழிடம் பேசிய போது லிண்ட்சே தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வைரலான வீடியோ
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாக மாறியுள்ளது.
An Amazon customer in Texas was not enthused when her first drone-delivered order was dropped into her swimming pool. After hearing the loud buzzing of the drone arriving, she ran outside to record the delivery, and to her surprise, it landed in her pool. pic.twitter.com/6TIcrJIVAR
— ABC7 News (@abc7newsbayarea) August 19, 2026
குறிப்பாக அமேசான் நிறுவனம் தன்னுடைய அமேசான் பிரைம் ஏர் சேவையை அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள அமேசான், இந்த ஆண்டில் பல பார்சல்கள் அமேசான் பிரைம் ஏர் சேவை மூலம் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானவையே என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |