7 பில்லியன் டொலர் - Decart AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வாங்க Amazon முயற்சி
Amazon Eyes 7 Bn Dollar AI Startup Decart Deal: Decart எனும் AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வாங்க Amazon திட்டமிட்டுள்ளது.
Decart AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வாங்க Amazon முயற்சி
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Amazon, செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிருவனமான Decart-ஐ வாங்கும் முயற்சியில் உள்ளது.
Wall Street Journal வெளியிட்ட தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 7 பில்லியன் டொலராக இருக்கலாம்.

Decart நிறுவனம் Lucy என்ற AI மாடலை உருவாக்கியுள்ளது. இது நேரடி வீடியோ எடிட்டிங் செய்யும் திறன் கொண்டது.
மேலும், Oasis என்ற மாடல் மூலம் ரோபோடிக்ஸ் மற்றும் தானியங்கி வாகனங்களை சோதனை செய்ய செயற்கை சூழல்களை உருவாக்கும் திறனும் உள்ளது.
PitchBook தரவுகளின்படி, மே 2026-இல் Decart நிறுவனத்தின் மதிப்பு சுமார் 4 பில்லியன் டொலர் என கணிக்கப்பட்டது. அதே மாதம், Radical Ventures தலைமையில் 300 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டது. Nvidia புதிய முதலீட்டாளராக இணைந்தது.
முன்னதாக, Anthropic நிறுவனம் Decart-ஐ வாங்கும் முயற்சியில் இருந்தது. ஆனால், due diligence முடிந்தபின் அந்த ஒப்பந்தத்தை கைவிட்டது.
Amazon தனது AI திறன்களை மேலும் வலுப்படுத்தும்
Amazon மற்றும் Decart இரண்டும் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த ஒப்பந்தம் விரைவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், Amazon தனது AI திறன்களை மேலும் வலுப்படுத்தும். குறிப்பாக, வீடியோ எடிட்டிங், ரோபோடிக்ஸ் மற்றும் தானியங்கி வாகனங்கள் தொடர்பான தொழில்நுட்பங்களில் Amazon-க்கு பெரிய முன்னேற்றம் கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |