Flipkart-ன் Shopsy போல Amazon ஆரம்பித்த புதிய App
600 ரூபாய்க்கும் குறைவான பொருட்களுக்கு Amazon நிறுவனம் Bazaar எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
அமேசானில் அனைத்து வகையான தயாரிப்புகளும் கிடைக்கின்றன. இருப்பினும், Meesho மற்றும் Flipkart-ன் Shopsy போன்ற ஆப்கள் மிகக் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதன் மூலம் பிரபலமடைந்தன.
இப்போது இந்தப் போட்டியை எதிர்கொள்ள அமேசான் இந்தியா Amazon Bazaar-ஐ தொடங்கியுள்ளது.
இந்த இ-காமர்ஸ் தளத்தில் தயாரிப்புகள் ரூ.600க்கும் குறைவான விலையில் கிடைக்கும்.
அமேசான் பஜார் மலிவு விலையில், unbranded fashion மற்றும் lifestyle தயாரிப்புகளின் கவர்ச்சிகரமான வரம்பைக் காண்பிக்கும். இந்திய நுகர்வோரின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் பஜார் பாணி இருப்பதாக நிறுவனம் உறுதியளிக்கிறது.
அதேநேரத்தில், தரம் அல்லது style-ல் சமரசம் செய்யாமல் பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக Amazon கூறுகிறது.
அமேசான் இந்தியாவின் ஆண்ட்ராய்டு செயலி மூலம் Bazaar-ஐ அணுகலாம். 600 ரூபாய்க்கும் குறைவான விலையுள்ள ஆடைகள், கடிகாரங்கள், காலணிகள், நகைகள் மற்றும் பைகள் உள்ளிட்ட பிராண்ட் இல்லாத பொருட்களை பட்டியலிட விற்பனையாளர்களை இ-காமர்ஸ் தளம் தேர்வு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |