30,000 ஊழியர்களை வெளியேற்றிய அமேசான்., AI-க்கு பில்லியன் டாலர் முதலீடு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், கடந்த எட்டு மாதங்களில் சுமார் 30,000 கார்ப்பரேட் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
நிறுவனத்தின் CEO ஆண்டி ஜஸ்ஸி, நிர்வாகச் செலவுகளை குறைத்து, நிறுவனத்தை எளிமைப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதனுடன், அமேசான் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது. புதிய AI டேட்டா சென்டர்கள் அமைப்பதற்காக பில்லியன் டொலர்கள் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், பணியாளர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீயாட்டில் நகர சபை கூட்டத்தில், அமேசான் பொறியாளர்கள் AI டேட்டா சென்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பணி நீக்கங்களும், AI-க்கு அதிக முதலீடும் ஒரே நேரத்தில் நடப்பது பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரில் நிறுவனங்கள் எவ்வாறு மனித வளத்தை குறைத்து, AI-க்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |