முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிய TikTok நிறுவனர்., ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியல் இதோ
ஆசியாவின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி சீனாவைச் சேர்ந்த நபர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்ட புதிய தரவரிசையில், TikTok நிறுவனர் Zhang Yiming, முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக உயர்ந்துள்ளார்.
Zhang Yiming-ன் சொத்துமதிப்பு தற்போது 92.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இது 2019-இல் 13 பில்லியன் டொலராக இருந்த நிலையில் 7 மடங்கு அதிகரித்துள்ளது.

ByteDance நிறுவனத்தின் உலகளாவிய வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரும் முதலீடுகள் இதற்குக் காரணமாகும்.
TikTok உலகளவில் முன்னணி குறுகிய வீடியோ தளமாகவும், ByteDance-ன் AI chatbot “Doubao” சீனாவில் 300 மில்லியன் பயனர்களுடன் மிகப் பிரபலமாகவும் உள்ளது.
இதனால், முகேஷ் அம்பானி 86.9 பில்லியன் டொலர் செல்வத்துடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இப்பட்டியிலில், ஆசியாவின் பெரும் செல்வந்தராக முதலிடத்தில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு தற்போது 117.4 பில்லியன் டொலராக உள்ளது.
பட்டியலில், ஜப்பானின் Tadashi Yanai ($72.5 பில்லியன்), Masayoshi Son ($72 பில்லியன்), ஹாங்காங் தொழில் அதிபர் Zeng Yuqun ($69.4 பில்லியன்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஆசியாவின் பணக்காரர்களின் தரவரிசை, உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் AI முதலீடுகள் எவ்வாறு செல்வத்தை மாற்றுகின்றன என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |